தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மணிகண்டன் என்பவர். இவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது. திருட்டு வழக்கில் தீவட்டிப்பட்டி போலீசார் இவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இவர் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டனை சேலம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவரை சிறை பாதுகாப்புடன் அதிகாரிகளுடன் சிறையில் கொண்டு வந்து அடைக்க வந்த பொழுது நுழைவாயிலில் அவரை சோதனை மேற்கொண்டனர். அவரது ஆடைகளை நன்றாக சோதனை செய்து பார்த்த பொழுது எதுவும் சிக்கவில்லை.
இதனை எடுத்து அவர் மீது மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதித்தனர். அப்பொழுது கருவில் சத்தம் வந்துள்ளது. எதுவுமே இல்லாத நிலையில் எப்படி கருவி ஒளி எழுப்புகிறது என்று சந்தேகம் அடைந்த வார்டன்கள் பின்பக்கம் ஆசனவாய் வழியாக மறைத்துக் கொண்டு வந்தாயா? என விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் செல்போன் கஞ்சாவை ஆசன வாய் வழியாக பதுக்கி வைத்து எடுத்து வந்ததை மணிகண்டன் கூறியுள்ளார்.
இதனை எடுத்து அவரை கழிவறைக்கு அழைத்து சென்று வழக்கமான முறையில் கஞ்சா பொட்டலத்தை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் வெளியே வராதால் கைதி அலறல் சத்தம் அதிகமானது வழியால் துடித்தார். இதனை அடுத்து கைதி மணிகண்டனை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது டேப் சுற்றிய மூன்று உருண்டைகள் இருந்தது தெரிந்தது பின்னர் இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர்.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் பணம் சிக்கிய விவகாரம்.. சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையால் நீதிபதி யஷ்வந்துக்கு சிக்கல்..
இதில் செல்போன் மற்றும் 45 கிராம் கஞ்சா இருந்தது. தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது அயன் திரைப்பட பாணையில் சிறைக்குள் கைதி கஞ்சா மற்றும் செல்போன் மறைத்து வைத்து கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் யாருக்கு இந்த கஞ்சா மற்றும் செல்போன் யாருக்கு வழங்க எடுத்து வரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவை மட்டும் டார்கெட் செய்வது ஏன்? இன்னும் நிறையா பாக்கப்போறீங்க! ட்ரம்ப் வார்னிங்..