விதவையான இரண்டு குழந்தைகளின் தாயை மணந்து, திருமண இரவுக்குப் பிறகு மருத்துவ அறிக்கை வெளிவந்தபிறகு கணவர் மரண பயத்தில் சிக்கித் தவிக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்கு மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவர் காவல்துறையினரின் உதவியை கோரினார். தன்னையும், தனது குழந்தைகளையும் மிரட்டுவதாகவும், அதுவும் தனது இரண்டாவது மனைவியின் குடும்பத்தாராலேயே மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முழு விஷயத்தையும் கேட்ட காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து, ''ஐயா, என் முதல் மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். எனக்கு மூன்று குழந்தைகள். அவர்களை வளர்க்க, நான் 2024 ஆம் ஆண்டு ஒரு விதவையை மணந்தேன். அவளுக்கு முதல் கணவரிடமிருந்து இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், திருமண இரவுக்குப் பிறகு, என் மனைவியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. நான் அவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தேன். பின்னர் என் இரண்டாவது மனைவிக்கு எய்ட்ஸ் இருப்பது எனக்குத் தெரியவந்தது. இந்த விஷயம் அவரது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. இதை அறிந்ததும் அதிர்ந்து போனேன்.
இதையும் படிங்க: கபளீகரம் செய்யும் அண்ணாமலை... பாஜகவில் டென்ஷன்... ஒரே மோடுக்கு வந்த ஸ்டாலின்- எடப்பாடியார்..!

அவளது பெற்றோரிடம் அவர்களின் மகள் மூன்றாம் நிலை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் சொன்னபோது, அவர்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினர்'' எனத் தெரிவித்தார். நிலைமை மிகவும் மோசமாகி, அந்தப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அப்போதிருந்து, தனது இரண்டாவது மனைவியின் குடும்பத்தினர் கணவரையும், அவரது முதல் மனைவியின்கு ழந்தைகளையும் கொலை செய்வதாக மிரட்டி வருவதாக குற்றம் சாட்டுகிறார்.
அந்த நபரின் புகாரின்படி, அவர்கள் இருவரும் டிசம்பர் 11, 2024 அன்று மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர். இரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஆனால் இதற்குப் பிறகு நிலைமை திடீரென்று மாறியது. திருமணமான முதல் நாளிலிருந்தே தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கணவர் போலீசாரிடம் தெரிவித்தார். காய்ச்சலுடன் பல பிரச்சனைகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இதனால், திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது மனைவிக்கு சிகிச்சை அளிக்க பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் பலனளிக்கவில்லை.மருத்துவர்கள் அவரது மனைவிக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் சில பரிசோதனைகளைச் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

பரிசோதனை அறிக்கை வந்தபோது, மனைவிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது மட்டுமல்ல, இது தொற்றுநோயின் மூன்றாவது கட்டம் என்றும் அதிர்ச்சியூட்டிள்ளனர். இரண்டாவது மனைவியின் இளைய மகளும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அந்த நபர் போலீசாரிடம், தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு முதல் கணவரின் மூலம் இரண்டு மகள்கள் இருப்பதாகக் கூறினார். அந்தப் பெண்களில் ஒருத்திக்கு ஒன்றரை வயது.அவளும் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
முதல்ணவருக்கு பிறந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் இரண்டாவது கணவரே ஏற்றுக்கொண்டார். ஆனால் இப்போது அவரே தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து பயப்படுகிறார். தனது குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவர் கூறியதாக கணவர் கூறுகிறார். இதனால் முழு குடும்பமும் தூக்கத்தை இழந்து தவிக்கிறது. குற்றச்சாட்டுகளை விசாரித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர், அமைச்சர்கள் வீட்டுப் பிள்ளைகள், பேரன், பேத்திகள் மும்மொழி படிப்பார்கள்... அரசுப் பள்ளி பிள்ளைகள் படிக்கக் கூடாதா.? தெறிக்க விட்ட அண்ணாமலை.!