டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் பரவலாக வாக்கு மோசடி நடந்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். ஹரியானவில் 2024 அக்டோபரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், ஆதாரங்களையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்வைத்துள்ளார்.
"உரிமைகள், இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் திருட்டு" என்று விவரித்தார். பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர "ஆபரேஷன் சர்க்கார் சோரி" என்ற சதி நடந்ததாகவும், தேர்தல் ஆணையம் (ECI) பாஜகவுடன் இணைந்து தேர்தல் மோசடி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பை அவர் "ஹைட்ரஜன் குண்டு" வெளிப்பாடு என்று அழைத்தார். கர்நாடகாவின் மகாதேவபுரா மற்றும் ஆலந்த் தொகுதிகளில் நடந்த வாக்கு மோசடி குறித்து ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி தற்போது ஹரியானா தேர்தலில் நடந்த மோசடிகள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்று முதல்..! அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்... SIR பணிகள் தொடக்கம்...!
ஹரியானாவில் மொத்தம் 2 கோடி வாக்காளர்கள் இருந்தபோது, 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் தெரிவித்துள்ளார். அனைத்து வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணித்தன, மேலும் தபால் வாக்குகளிலும் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது. ஆனால் முடிவுகள் தலைகீழாக மாறின என்று ராகுல் தெரிவித்தார். காங்கிரஸ் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவுபடுத்திய அவர், இந்த மாற்றத்திற்கான காரணம் வாக்கு திருட்டு மட்டுமே என்று தெளிவுபடுத்தினார்.
ஹரியானாவில் 5 வகையான வாக்கு திருட்டு இருப்பதாக அவர் விளக்கினார்:
1. போலி வாக்காளர்கள் 5,21,619 பேர் இருந்ததாகவும்
2. முகவரி அல்லது போலி முகவரிகள் இல்லாத வாக்காளர்கள் 40,009 பேர் இருப்பதாகவும்
3. மொத்த வாக்காளர்கள் ஒரே முகவரியில் ஆயிரக்கணக்கானோர், 10,452 பேர் இருப்பதாகவும்,
4. படிவம் 6 புதிய வாக்காளர் பதிவை தவறாக பயன்பாடு 33,692 ஓட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன
5. படிவம் 7 (நீக்குதல்) தவறான பயன் பட்டுள்ளதாகவும், 1,24,177 வாக்காளர்களின் புகைப்படங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், ஒரே புகைப்படம் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 100 முறையும், இரண்டு தொகுதிகளில் 223 முறையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்களும் சுப்ரீம் கோர்ட் போவோம்… திமுகவுக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சவால்…!