இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து (60), சங்கர பாண்டியன் (50) மற்றும் மாடசாமி ஆகிய மூவர் இந்து சமய அறநிலையத்த துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளிய சாமி கோயிலில் காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் மாடசாமி நேற்று பகலில் வேலை பார்த்ததால் மற்ற இருவரும் இரவு நேரத்தில் காவல் காத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாடசாமி கோவிலுக்கு வந்த போது பிரதான கதவின் சிறிய கதவு திறந்திருந்தது.
இதையும் படிங்க: அதிரடி திருப்பம்... கை, கால்களைக் கட்டி 17 வயது சிறுவன் கொடூர கொலை... கைதானவர் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்..!
உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேர காவலாளிகள் பேச்சி முத்து மற்றும் சங்கர பாண்டியன் ஆகிய இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர்.
அருகே இருந்த உண்டியல் சேதமாகி இருந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் மாடசாமி தகவல் கூறியுள்ளார். அவரது தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.
உண்டியல் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனது. தகவல் அறிந்து இறந்த இருவரது உறவினர்களும் கோவில் முன் திரண்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்கள் உடலை வாங்க மாட்டோம் என தற்போது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு டிஎஸ்பி பஸினா பீவி தலைமையிலான காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” - 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!