எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளை இணைய அரசாங்கம் நடத்த அனுமதித்தால் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கலைஞர் கருணாநிதி இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய பிறப்பித்த உத்தரவு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யும்படி தமிழக அரசு மேல்முறையீடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீயா நானா? தந்தை, மகனின் குடுமிபிடிச் சண்டை... ராமதாஸ் தரப்பு மனு நாளை விசாரணை!

எழுத்தாளர்களுக்கு வீடு தருவது உணர்வுபூர்வமான விஷயம் இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணைய அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இணைய அரசாங்கம் நடத்தினால் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் நீதிபதி கூறினார்.
தமிழ்நாடு அரசு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் இலக்கியத்திற்கு பங்களித்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் "கனவு இல்லம்" என்ற திட்டத்தை 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாடமி விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது உள்ளிட்டவற்றைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...