மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் அதே பகுதியைச் பூர்வீகமாகக் கொண்ட கவிராஜ் என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு தருணம் நடைபெற்றுள்ளது.
தற்போது கவிராஜ் லண்டனில் வசித்து வந்த நிலையில், திருமணம் முடித்துவிட்டு மீண்டும் லண்டனுக்கே திரும்பிச் செல்லும் நோக்கத்தில் இருந்துள்ளார். அதன் பின்னர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மஹாலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்ததாகவும், தன்னுடன் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக 10 லட்ச ரூபாய் உனது தந்தையிடம் இருந்து வாங்கி தர வேண்டும். அப்படி செய்தால் தான் நான் உன்னை லண்டனுக்கு அழைத்து சென்று வாழ்வேன் என காயத்ரியை கவிராஜ் மிரட்டி உள்ளார்.
இதையும் படிங்க: காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம்.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!

இதற்காக காயத்ரியை கவிராஜ் அடித்ததாகவும், திருமணமாகி 18 ஆவது நாளிலேயே காயத்திரியிடம் சண்டையிட்டு மீண்டும் காயத்ரியின் அப்பா வீட்டிற்கே அனுப்பி வைத்த நிலையில் கவிராஜ் அவரின் குடும்பத்தினருடன் லண்டன் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த காயத்ரி, இன்று மனு குறைதீர் கூட்டத்தில், லண்டனில் இருக்கும் அவரது கணவரை மீட்டு தரும் படியும் அவர்களை தன்னால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
மேலும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனது கணவரை அழைத்துவர வேண்டியும், தன்னை தனது கணவருடன் சேர்த்துவைக்க கோரியும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இளம்பெண் காயத்ரி மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மனைவி காயத்ரி கூறியதாவது, தன்னை லண்டன் அழைத்துசெல்வதாக கூறி குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணமான நிலையில் 18வது நாளில் தன்னை இங்கே விட்டு விட்டு தனது கணவர் லண்டன் சென்று விட்டார்.
அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும் அவர் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதலால் தனது கணவரை மதுரைக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார். லண்டனில் உள்ள தனது கணவரை இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் அதிர வைத்த கொள்ளையர்கள்.. 20 நிமிடங்களில் ரூ.25 கோடி நகைகள் கொள்ளை..!