உதகை அருகே பழங்குடியின பெண்ணை இழுத்து சென்ற புலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகை அருகே சிங்காரா பகுதியில் ஒரே இடத்தில் தென்பட்ட மூன்று புலிகளின் வீடியோ காட்சிகள் வைரலாகி வந்தன. மசினகுடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்கள் முதுமலை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளாக உள்ளதால் வனவிலங்குகள் அதிகமாக தென்படுகின்றன .
குறிப்பாக சமீப நாட்களாக மாயார் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் புலி அடிக்கடி தென்படுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் பயணித்து வருகின்றனர் .
இதேபோல் சிங்கார பகுதியில் பகல் நேரங்களிலேயே புலிகள் அடிக்கடி சாலையை கடப்பதும் சாலை ஓரங்களில் ஓய்வெடுப்பதை கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசிப்பது, அதனை வீடியோ எடுப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர்.
ஆனால் அப்பகுதி மக்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் வேலை செய்வோர் புலி, கரடி, யானை, சிறுத்தை போன்ற வன விலங்குகளால் தங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது அவர்களது அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கும் வகையில், ஒட்டுமொத்த ஊட்டியையே அதிர வைக்கும் அளவிற்கு உச்சக்கட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெண்ணை உயிருடன் இழுத்துச் சென்ற புலி:
உதகை அருகே மாவனல்லா கிராமத்திற்குள் உள்ள தனியார் நிலத்தில் சிக்கி என்ற பழங்குடியின பெண் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது பின்புறமாக வந்த புலி அவரை இழுத்து கொண்டு புதருக்குள் சென்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தமிட்ட போதும் அவரை அகழிக்குள் இழுத்து சென்றது. தற்போது அந்த இடத்திற்கு சிங்காரா வனத்துறையினர் விரைந்து உள்ளனர்.
இதையும் படிங்க: பாக்., ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்!! 3 பேர் உயிரை பறித்த பயங்கரவாதிகள்!
புலியை விரட்டி பெண்ணை மீட்க பொதுமக்களும் வனத்துறையினரும் களத்தில் இறங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: அன்பாக அழைத்த பிரதமர் மோடி..!! 2026ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர்..!! காரணம் இதுதான்..!!