சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- அதிமுக- பாஜக கூட்டணியானவுடன் திமுகவுக்கு பயம் வந்து விட்டது.10- கட்சிகளை கொண்ட திமுக கூட்டணி பொறுப்பேற்ற கொள்கையில்லாத கூட்டணி. கொள்கையோடு ஆன்மிகத்தை உள்ளடக்கிய அரசியலை அதிமுக- பாஜக கூட்டணி கையி லெடுத்துள்ளது. இது ஒரு அற்புதமான கூட்டணி வெற்றி பெறும் கூட்டணி என மக்கள் முடிவெடுத்து விட்டதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
2026- சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின்7- தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராவார். அதிமுகவில் ஜாதி மதம் கிடையாது. எல்லோரும் அண்ணன்- தம்பிகளாக பழகுகிறோம். ஆனால் தேர்தல் வந்து விட்டால் ஜாதியை சொல்வார்கள். நான் அனைத்து ஜாதி மதத்தினரின் அன்பையும் பெற்றுள்ளேன். நாம் விட்டதை பிடிக்க வேண்டும். திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. அதிமுக வலுவாயிருக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும். நாம் எதிர்ப்பது சின்னக் கட்சி கிடையாது. திமுகவினர் தேர்தல் நேரத்தில் பல சித்து வேலைகளுடன் எதையாவது செய்து வெற்றி பெற நினைப்பார்கள்.
நாம் அதையெல்லாம் முறியடித்து ஜனநாயக ரீதியாக ஆதரவுதரத் தயாராக வுள்ள மக்களை சந்தித்து சரியான முறையில் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். சிவகாசி தொகுதியில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ற வரலாறை உருவாக்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு. தேர்தல் காலத்தில் என்னைப் பற்றி மற்ற ஜாதி- மதத்தினருக்கு நான் எதிராக பேசியதாக கூறி தவறாக சித்தரித்து கீழ்த்தரமான அரசியல் செய்வார்கள்.
இதையும் படிங்க: திராவிட மாடல் இல்ல... FAILURE மாடல்! திமுகவை விளாசிய இபிஎஸ்..!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் நான் தோற்றதற்கு இதுதான் காரணம். நான் உண்மை நிலைமையை கண்டறிவதற்குள் தேர்தல் முடிந்து விட்டது. இல்லையென்றால் நான்10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன். திமுகவினரின் ஐடி பிரிவு என்னை குறி வைத்தே செயல்படுகின்றனர். திமுக ஐடி பிரிவின் என் மீதான தவறான செய்திக்கு அதிமுக ஐடி பிரிவினர் பதிலுக்கு பதில் பதிவிடுங்கள்.
சிறுபிள்ளைத்தனமான, கோழைத்தனமான வேலையை திமுக ஐடி பிரிவு செய்து வருகிறது. இந்த செயல்பாடு கேவலமாக இல்லையா? எல்லா ஜாதி மதத்தினரின் வாக்குகளை என்னால் வாங்க முடியும். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மறைந்த தலைவர்களின் நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டு வருகிறேன். நான் எல்லோருக்கும் நல்லவனாக வேண்டியவனாக இருப்பதால் என்னை அனைத்து ஜாதி மதத்தினரும் அவரவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் என்னை விரும்பி அழைக்கின்றனர்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு.. தடை உத்தரவை ரத்து பண்ணுங்க! சுப்ரீம் கோர்ட்டில் திமுக மேல்முறையீடு..!