விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆபாசமாக விமர்சித்ததாக கூறி ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பாக விசிக தொண்டர்களால் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் குறித்த ஆபாசமாக விமர்சித்ததால் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருமா பற்றி அவதூறாக பேசுவாயா? எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் செருப்புகளை கழற்றி அவர் மீது வீசியும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றனர்.

ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவின் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். தலைநகர் சென்னையில், காவல்துறை அலுவலகத்தில் வைத்தே, ஒரு கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு யார் துணிச்சல் அளித்தது என்றும் நேற்று ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருரைக் கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று காவல்துறை அலுவகத்தில் மற்றொரு கட்சித் தலைவரைத் தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏட்டளவில் கூட இல்லை என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: திருமா பத்தியே பேசுவியா? ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர் !
அதிலும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே தாக்குதலில் ஈடுபட்டிருப்பதும், அதனைத் தடுக்க இயலாமல் காவல்துறையினர் கைகட்டி நிற்பதும், தமிழகத்தை வன்முறைப் பாதையில் அழைத்துச் செல்வது தான் திமுக அரசின் திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறினார். தொடர்ந்து எதிர்க்கட்சியைச் சார்ந்தோர் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், இனியாவது சட்டம் ஒழுங்கை சீர்செய்ய திமுக அரசு முன்வர வேண்டும் என்றும் எந்தவொரு அரசியல் சார்புமின்றி, ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுகவை துரத்தனும்… எங்க நிலைப்பாடு ஒன்னு தான்! - நயினார் நாகேந்திரன்