கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி ஆசியாவின் மிக முக்கியமான துப்பாக்கி சுடுதல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தப் போட்டி, ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் மேற்பார்வையில், ஆசிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியானது, ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளுக்கு முக்கியமான தளமாகவும், ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கிய வாய்ப்பாகவும் விளங்குகிறது.
இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ரைஃபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுகள், ஸ்கீட், ட்ராப், மற்றும் டபுள் ட்ராப் உள்ளிட்ட ஷாட்கன் பிரிவுகள் ஆகியவை இடம்பெறுகின்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு அணி பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன, மேலும் இவை தனிநபர் மற்றும் குழு நிகழ்வுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், 16வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது. இந்த 99 பதக்கங்களில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கமும் அடங்குகிறது.
இதையும் படிங்க: முதல் முறையாக இந்தியாவிற்கு பதக்கம்… அலைச்சறுக்கு போட்டியில் தமிழக வீரர் சாதனை!
கஜகஸ்தான் 21 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், 15 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்று சீனா 3வது இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: உலக அரசியலையே புரட்டிப்போட்ட சம்பவம்... ஜப்பானில் மோடி கால் வைத்த அடுத்த நொடியே ஆட்டம் கண்ட வல்லரசு...!