இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை இரவு ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்கியது. ஒவ்வொரு தாக்குதலையும் இந்தியா முறியடித்துள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கடுமையான நிலைப்பாடு, நடவடிக்கையின் விளைவு இப்போது அண்டை நாடான வங்கதேசத்திலும் எதிரொளித்து வருகிறது. இந்து சமூகத்தின் பாதுகாப்பிற்காக அங்குள்ள காவல்துறையினர் தனி எச்சரிக்கை விடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் கோபம் வங்கதேச இந்துக்கள் மீது விழக்கூடும் என்ற அச்சம் உள்ளது. கலவரங்களைத் தவிர்க்க, வங்கதேச காவல் தலைமையகம் ஒரு கடிதம் வெளியிட்டு, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து காவல் பிரிவுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திலிருந்து வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர் வெளியேற்றப்பட்டார்களா, இல்லையா..? டவுட்டு கிளப்பும் நயினார்.!
பங்களாதேஷ் காவல் தலைமையகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், நாட்டின் அனைத்து காவல் பிரிவுகளும் இந்து சமூகத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை காவல் துறைத் தலைவர் சார்பாக கூடுதல் டிஐஜி ஷாஜாதா முகமது அசாதுஸ்ஸாமான் வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு கட்டுக்கடங்காத சக்திகளும் இந்துக்களுக்கு எதிராக வன்முறை, கலவரத்தைத் தூண்டக்கூடாது என்பதற்காக எல்லைப் பகுதிகளில் காவல்துறை கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், மொபைல், இணையம், சமூக ஊடகங்களிலும் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்தவொரு வதந்தி, வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவும் நாட்டில் உறுதியற்ற தன்மையைப் பரப்பக்கூடாது என்பதே இதன் நோக்கம்.

எந்தவிதமான நாசவேலைகள், ஆத்திரமூட்டும் அறிக்கைகள், வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளை கண்டிப்பாகத் தடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவொரு சதித்திட்டத்தையும் முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தின் விளைவுகளை தங்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இந்து சமூகம் அனுபவிப்பதை வங்காளதேச அரசாங்கம் விரும்பவில்லை.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம் நாட்டில் வகுப்புவாத நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணுவது. வங்காளதேசம் இதற்கு முன்பு பல முறை வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருக்கும்போது, அங்குள்ள அரசு எந்த ஆபத்தையும் எடுக்க விரும்பவில்லை.
இதையும் படிங்க: இந்தியா- பாக், இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்..! 'டான்' ஆக முயற்சிக்கும் வங்கதேச தவளை..!