ரஜினி முருகன் படத்தை நாம் பார்த்திருப்போம். அதில் ராஜ் கிரண் முதியவராக இருப்பார். அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருவார்கள். சொத்து தொடர்பான விஷயத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ராஜ்கிரண் இறந்தது போல் நடிப்பார். பிறகு சொந்த பந்தங்கள் இணைந்தவுடன் தான் இறக்கவில்லை என்பதையும் சொத்து பிரச்சனையை சரி செய்வதற்காக நடித்தேன் என்பதையும் சமுத்திரக்கனி என்ட்ரி நடக்கும்போது கூறுவார்.
இந்த படத்தின் பாணியில் பீகாரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் தன் மேல் குடும்பத்தினர் வைத்திருக்கும் அன்பை அறிவதற்காக இறந்தது போல் நடித்துள்ளார். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் தகன மேடையில் இருந்து எழுந்து வந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இறந்தது போல் நடித்து, இறுதிச் சடங்குகள் முடியும் வரை காத்திருந்து, தகன மேடையில் அனைவரும் அழுது கொண்டிருக்கும் போது எழுந்து கொடுத்த ஷாக் பதற்றத்தை ஏற்படுத்தியது. பீகாரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் மோகன் லால். இவர் தனது குடும்பத்தாரின் அன்பை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக இறந்தது போல் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பீகார்: வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!
குடும்பத்தினர் அனைவரும் இறுதிச் சடங்குகள் செய்து முடிக்கும் வரை காத்திருந்த மோகன்லால் தகன மேடையில் அனைவரும் சூழ்ந்து நின்று அழுத போது எழுந்து நின்று குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். குடும்பத்தார் அன்பை சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக ரஜினி முருகன் பட பாணியில் ஒருவர் செய்த இந்த நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இனி ஜாலி தான்.. VIP-களுக்கு மாதம் ரூ.1000.. பீகார் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு..!!