முன்னாள் ராணுவ வீரர்களை அழைத்து பேரணி செல்கிறேன் என தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது, இந்தியாவில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது என தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கன்னியாகுமரி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக இருக்க கூடிய இந்தியா என்பது தற்போதைய நிலை அல்ல பாகிஸ்தான் செய்யக்கூடிய தவறுகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி என்பது இன்றும் நாம் கொடுத்து அரத்தின் அடிப்படையில் தான் நம்மளுடைய முதலீடு இருக்கிறது நீங்கள் யோசித்துப் பாருங்கள் 2008 மும்பை அட்டாக் நடந்த போது 166 பேர் கொல்லப்பட்டார்கள் அன்று அமைதி முறையில் ஐநா சபையில் இருந்து எல்லோரும் வேண்டுகோள் விடுத்தும் குறிப்பாக யாரெல்லாம் இந்த தாக்குதலுக்கு முன்னிலையில் இருக்கிறார்கள் அவர் இது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் பிறகு தொடர்ச்சியாக பல தாக்குதல் நடந்தாலும் பஞ்சாபில் நடந்த தீவிராத தாக்குதலில் ஈடுபட்டார்கள் அன்று கூட நான் சொன்னது இந்த பாகிஸ்தான் நாட்டில் இருக்கக்கூடிய பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவில் வந்து பாருங்கள் டிஎன்ஏ ஆதாரம் தொலைபேசி உரையாடல் ஆகியவை பாருங்கள் தீவிரவாதிகள் எப்படி வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பதை பாருங்கள் அன்று பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவின் விமான தளத்திற்கு அனுமதி கொடுத்தார்கள் ஆனால் திரும்பிப் போன பாகிஸ்தான் அதிகாரிகள் உள்ளே வந்து இங்கு விசாரணை செய்யலாம் அதே போல் எங்களையும் உங்கள் நாட்டுக்கு அனுமதியுங்கள் என கேட்டார்கள் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையும் படிங்க: இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!
2016 தாக்குதல் நடத்தி விட்டு 23 ராணுவ வீரர்கள் அவர்கள் தங்கி இருந்த பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் அப்போது அவர்கள் எல்லையை தாண்டி பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் செய்யக்கூடிய எல்லா தவறுகளுக்கும் நம்முடைய பதிலடி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு படி மேலே செல்கிறோம். 2025 எல்லாத்தையும் தாண்டி பெகல்காம் தாக்குதலில் 25 அப்பாவிகள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கலா என கேட்டுக் கொன்றிருக்கிறார்கள் அதற்கும் பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் தீவிரவாதி மையங்கள் எங்கே இருக்கிறதோ லஸ்கர் தொய்பா, இஸ்புல் முஜாஹிதீன் போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

பாகிஸ்தானின் பகுதியில் நான்கு இடத்தில் தீவிரவாத அமைப்புகளை பார்த்து தாக்கல் நடத்தி இருக்கிறோம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை பார்த்து தாக்குகிறார்கள் இன்று அதிகாலையில் மேல் அதிகாரி ஒருவரை கொன்று இருக்கிறார்கள் இருவருக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்று இருக்கிறார்கள் அதை தாண்டி கடந்த 13 நாளாக எல்கை தாண்டி சண்டை நடந்து கொண்டிருக்கிறது கடந்த மூன்று நாட்களாக 400 கும் மேற்பட்ட டுரோன்களை நமது நாட்டிற்குள் அனுப்பி அட்டாக் செய்திருக்கிறார்கள் இந்தியா எடுத்த நடவடிக்கை என்னவென்றால் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் செய்த தவறுக்கு தீவிரவாத மையங்கள் எங்கு இருக்கிறதோ அதை நோக்கி நாம் தாக்குகிறோம் பாகிஸ்தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களை தாக்குகிறார்கள் நமது மீது ஒருவர் போர் தொடுக்கும்போது பதிலடி கொடுக்கவில்லை என்றால் நாம் கோழைகள் நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பேச வேண்டிய கட்டாயம் நம் இந்தியாவிற்கு இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரையில் 10:30 மணி அளவில் இரண்டு ராணுவ பாதுகாப்பு படை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள். பாகிஸ்தான் செய்திருக்கிற தவறுகளுக்கெல்லாம் பதிலடி கொடுத்து வருகிறோம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 12-ல் ஒரு பங்கை மட்டுமே கொண்டுள்ள பாகிஸ்தான் டாக்டர் நடத்துகிறது. நாம் எந்த நாட்டின் எல்லையும் பிடிப்பதற்கு சண்டை போடவில்லை நமது நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலை வேரோடு அருத்தெறிய வேண்டும் என்பதற்காக இந்த நோக்கத்தோடு பாரத நாட்டின் மீது உள்ள பற்று நமக்கு இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் ஒரே நாடாக ஒற்றுமையாக இருந்து இந்தியர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் மக்கள் என்ற உணர்வோடு இருக்க வேண்டும். சீருடை போட்டுள்ள அனைவரின் பேச்சையும் கேட்க வேண்டும் தற்போது போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய கடமை அரசு சொல்லக் கூடியதை நாம் கேட்க வேண்டும் செயல்படுத்த வேண்டும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காவல்துறையினர் சொல்லக்கூடியதை கேட்க வேண்டும்.
சமூக வலைதளத்தில் எல்லோருக்கும் பாதுகாப்பான பதிவுகளை பதிவிட வேண்டும் நிச்சயமாக இன்றும் நாளையும் நமக்கு முடியப்போவதில்லை மோடி அவர்களை பொறுத்தவரையில் பாரத பிரதமர் சங்கல்பத்தோடு களம் இறக்க இருக்கிறார் தாக்குதல் நடந்த போது பிரதமர் அவர்கள் மிகத் தெளிவாக இந்த பூமியில் எங்கு ஒளிந்து இருந்தாலும் பூமிக்கு கீழே ஒளிந்து இருந்தாலும் உங்களை பிடித்து இல்லாமல் பண்ணி விடுவேன் என கூறியிருக்கிறார்.

இந்த போர் தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்று நாளை முடியாது நாம் அக்ரசிவாகப் போகத்தான் போகிறோம் இது பாகிஸ்தான் இதன் பிறகு இன்னொரு அப்பாவி மக்கள் உயிரை எடுப்பதற்கு பல முறை யோசிக்க வேண்டும் நாம் எல்லோருமே இந்த நேரத்தில் பேசக்கூடிய விஷயம் செய்யக்கூடிய விஷயம் எல்லாம் கண்ணியமிக்கதாக அரசு ஒத்துழைப்பு அளிப்பதாக இருக்க வேண்டும் என்ற தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன் என் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.
மக்களை தாக்கக்கூடிய பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது நாம் நினைத்தால் பாகிஸ்தானை ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம் ஆனால் மோடி அவர்கள் அறத்தின் அடிப்படையில் போரிட்டுக் கொண்டிருக்கிறோம் அவர்கள் டுரோன் மூலம் தாக்குதல் நடத்துவதால் நாம் அவர்களது ஏர் டிபன்சஸை நாம் அடித்திருக்கிறோம்.பாகிஸ்தான் கையில்தான் இருக்கிறது இதை ராணுவ ராஜ்யத்தில் கொண்டு செல்வதால் என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் வரைபடத்தில் இருக்காது என நினைக்கிறேன் அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!