பாகிஸ்தானில் அதிக நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக இருப்பது பலுசிஸ்தான். இங்கு எண்ணெய் வளம் அதிகம்.இங்கு பலுாச் இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் அரசு பலுாச் இன மக்களை அடக்கி, அச்சுறுத்தி ஆண்டு வருகிறது. அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறது. இதனால், பலுசிஸ்தான் என்ற பெயரில் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு போராளிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமானது பலுச் விடுதலை ராணுவம் (BLA) என்ற போராளிக்குழு.

ராணுவம் போன்ற அனைத்து வசதிகளுடன் செயல்படும் இந்த அமைப்பு, அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் மீதும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலை முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் தண்டவாளத்தை வெடிவைத்து தகர்த்த பலுச் விடுதலை படையை (பிஎல்ஏ) சேர்ந்தவர்கள் சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: சும்மா இறங்கி அடிங்க.. இந்தியாவுக்கு ஃபுல் சப்போர்ட்.. ரஷ்யா, ஜப்பான் வரிசையில் அமெரிக்கா..!

அப்போது அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ரயில் பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்தனர். பலூச் விடுதலை ராணுவத்தை சேர்ந்த 33 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.

தற்போது இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் கவனம் செலுத்தி வரும் நிலையில், பலுச் விடுதலை ராணுவம் மீண்டும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள், கலாட் மாவட்டத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர். குவெட்டா - கராச்சி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அங்கு அமைந்துள்ள, வங்கிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதேபோல, குவெட்டா பகுதியில் அமைந்துள்ள கடானி சிறையை தாக்கிய பலுச் விடுதலை ராணுவத்தினர், அங்கிருந்த 10 போராளிகளை விடுவித்தனர். போலீசார் 5 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர். பலுச் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் மக்கள் சித்ரவதைக்கு ஆளாவதாகவும், லாக்கப்பில் வைத்து கொல்லப்படுவதாகவும், அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு தனி நாடு ஒன்றே தீர்வு என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் சோதனையிட்ட அவர்கள், வாகனங்களில் வந்த மக்களிடம், 'சுதந்திரத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும். இதை உங்கள் பாகிஸ்தான் அரசிடம் சொல்லுங்கள்' என்று கூறினர்.

பலூச் விடுதலை ராணுவத்தினரின் மற்றொரு கிளை அமைப்பான மஜீத் பிரிகேட், நோஷ்கியில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 90 பேர் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவத்தினர் கூறி உள்ளனர். ஆனால் 5 வீரர்கள் மட்டுமே இறந்ததாக பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் பெஷாவர், பன்னு மற்றும் தேரா இஸ்மாயில் கான் ஆகிய இடங்களில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது பலூச் விடுதலை ராணுவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 24 மணி 10 இடங்களில் பலூச் விடுதலை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளது பாகிஸ்தான் அரசை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: பாக். கதி அம்பேல்..! இந்தியாவை அசைச்சுக்க முடியாது..! அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ஆய்வு..!