காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலால் காஷ்மீரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை அடித்தே ஆக வேண்டும்... நாங்கள் இருக்கிறோம்... மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புடின்..!

பூஞ்சின் சூரன்கோட் என்ற பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்தப் பங்கரை கண்டுபிடித்தனர். இதில் டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்தஐந்து வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டு வயர்லெஸ் செட்கள், மூன்று போர்வைகளும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கிருக்கும் பொருட்களை வைத்துப் பார்த்தால் தீவிரவாதிகள் சமீபத்தில் அங்குத் தங்கியது போலவே தெரிகிறது.

இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தத் தீவிரவாதிகளின் பங்கரை கண்டுபிடித்த கொஞ்ச நேரத்திலேயே பூஞ்ச்உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு தனது துப்பாக்கிச் சூட்டை மீண்டும் தொடங்கியது. எல்லையில் அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் 11வது முறையாகத் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்திய கப்பல்களுக்கு பாக். துறைமுகத்துக்குள் நுழையத் தடை..!