பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் கப்பல்கள் இந்தியத் துறைமுகத்துக்குள் நுழையத் தடைவிதித்தும், இறக்குமதி, ஏற்றுமதிக்கு தடைவிதித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்குப் பதிலடியாக இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் வரவும், ஏற்றுமதி, இறக்குமதி செய்யவும் பாகிஸ்தான் அரசும் தடைவிதித்து பதில் நடவடிக்கை எடுத்துள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டபின் பல்வேறு ராஜாங்கரீதியான நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வருகிறது. தூதரக உறவுகளை ரத்து செய்தது, வான்வெளியை மூடியது, பாகிஸ்தான் விசாக்களை ரத்து செய்தது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையும் படிங்க: எங்கள மீறி தொடுடா பாக்கலாம்.! களம் இறங்கிய கமோண்டோக்கள்.. திருப்பதியில் திடீர் பரபரப்பு..!
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எந்த விதமான பொருட்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்றுமதியோ, இறக்குமதியோ செய்ய மத்திய அரசு நேற்று தடை விதித்தது. மேலும் பாகிஸ்தான் கப்பல்கள் இந்தியக் கடற்பகுதிக்குள் நுழையவும், துறைமுகங்களுக்குள் வரவும் இந்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, இந்தியக் கொடி பொருந்திய கப்பல்கள் எதையும் பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் நுழையவிடக்கூடாது,சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என் பாகிஸ்தான் இன்று உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடற்பிரிவு விவகாரங்கள் துறை விடுத்த அறிவிப்பில் “நம்முடைய கடற்பகுதி இறையாண்மை,பொருளாதார நலன்கள், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியக் கப்பல்கள் எதையும் பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் எந்த துறைமுகத்துக்குள்ளும் இந்தியக் கப்பல்கள் நுழையத் தடைவிதிக்கப்படுகிறது, பாகிஸ்தான் கப்பல்களும் இந்தியத் துறைமுகத்துக்குள் செல்லக்கூடாது. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பொருட்களுக்கு 200 சதவீதம் வரிவிதித்து, இறக்குமதியை நிறுத்தியது. இப்போது பாகிஸ்தான் சரக்குகள் மூன்றாவது நாடுகள் மூலம்கூட இந்தியாவுக்குள் வரத் தடைவிதித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அப்தாலி ஏவுகணை எனப்படும் 450 கி.மீ செல்லக்கூடிய ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த ஏவுகணைச் சோதனை என்பது என்பது இந்தியாவின் கோபத்தை தூண்டும் அப்பட்டமான முயற்சி என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 நாட்களாக உளவு.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தாக்குதல்.. தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்..!