புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் எம் பி யும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தேர்தல் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு தரவுகளை திரட்டி குற்றம் சாட்டி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தற்போது பாஜகவின் கை பாவையாக செயல்பட்டு வருகிறது. பாஜக கூறுவதை செயல்படுத்தும் ஆணையமாக உள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்பதுதான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தான் ராகுல் காந்தி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. நடைபயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இனிமே தப்பு நடக்காது! ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை.. தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்பு..!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவர் நடத்திய மாநாட்டில் யாரை குறை சொல்ல வேண்டும், எந்த கட்சியை குற்றம் சாட்ட வேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவர் பேசியது கண்டனத்துக்குரியது. புதிதாக அரசியல் கட்சி தொடங்கியவர் ஒரு மூத்த அரசியல் தலைவர் அதுவும் முதலமைச்சர் குறித்து அது போன்று பேசி உள்ளது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. எந்த கட்சியை அவர் குற்றம் சாட்டுகிறாரோ அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு பதிலடி வைப்பார்கள். அதேபோன்று திமுக நடிகர் விஜய் குறித்து விமர்சனங்களை வைத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியை ஏன் அவர் விமர்சிக்கவில்லை?, சினிமா வேறு அரசியல் வேறு என்பதை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விமர்சனம் எல்லைக்குள் இருக்க வேண்டும். விமர்சனம் எல்லை தாண்டி போகிற போது எதிர் வினைகளை அவர் சந்திக்க வேண்டி வரும்.
அண்ணா எம்ஜிஆர் படங்களை மாநாட்டில் பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் அது அவருடைய விருப்பம் அவருக்கு யாரை பிடிக்கிறதோ எந்த ஆட்சி போல் நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த தலைவர்கள் படத்தை போட்டு இருக்கிறார். இதுகுறித்து நான் மேலும் விமர்சிக்க விரும்பவில்லை
1967 1977 ஐ போல் வரலாறு திரும்பும் என்று கனவு காண்பதும் ஆசைப்படுவதும் அவர அவரது உரிமை அதேபோல் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆசைப்படுகிறார் கனவு காண்கிறார் கனவு கண்டு விட்டுப் போகட்டும்.
பல நடிகர்கள் கட்சியை தொடங்கியுள்ளனர் அதேபோல் தமிழ்நாட்டிலும் பல நடிகர்கள் கட்சியை தொடங்கியுள்ளனர். அதில் ஒரு சிலர்தான் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி விஜய் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டத்தை விட அதிக கூட்டத்தை கூட்டி தான் கட்சியை தொடங்கினார். ஆனால் அவர் வெற்றி பெற முடியவில்லை. ஒரு நடிகர் கட்சியை தொடங்கி வெற்றி பெறுவது என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வெற்றி தோல்வி என்பது பல வகைகளில் வருவது. அன்றைக்குள்ள சூழ்நிலை கூட்டணி ஆகியவற்றை பொறுத்து தான் வெற்றி வாய்ப்பு இருக்கும்.
வெற்றி தோல்வி யாருக்கும் நிரந்தரமானது கிடையாது. மக்கள் தான் எஜமானர்கள் கடைசியில் அவர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்கள். திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு.
அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக தான் போட்டியிட வேண்டும் என்று திமுகவில் நடக்கும் அனைத்து கூட்டங்களிலும் கூறப்பட்டு வருகிறது என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் இது குறித்து தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது தொகுதி உடன்பாடின்போது தான் தெரியவரும் இப்போது ஒவ்வொருவரும் போட்டியிட வேண்டும் என்று நினைப்பார்கள்
திமுக போட்டியிட்ட தொகுதியை காங்கிரஸ் கேட்கும் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதியை திமுக கேட்கும் இதெல்லாம் தொகுதி உடன்பாடு செய்யும்போது தெரியவரும். அதிமுக பாஜகவை வழி நடத்துகிறதோ அல்லது பாஜக அதிமுக வழி நடத்துகிறதோ என்பது அவர்களுக்குள் உள்ள விஷயம் அவர்கள் இருவரும் கூட்டணி கட்சிகள் உள்ளனர் இருப்பினும் அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை
இந்த கூட்டணி வெற்றி கூட்டணி அல்ல
பட்டமளிப்பு விழாவில் ஒருவரிடமிருந்து பட்டமோ விருது வாங்குவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் விரும்பினால் வாங்கலாம் விரும்பாவிட்டால் வாங்க முடியாது என்று கூறலாம் அது அவர்களது தனிப்பட்ட உரிமை இது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!