ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
செங்கோட்டையின் கேட் எண் 1 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை 6.45 மணி அளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள 8 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.

இந்த சம்பவத்தால் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த உமர் நபி என்பவரது புகைப்படம் வெளியான நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரர்களை புல்வாமா பகுதியில் இருந்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில்
இதையும் படிங்க: தணியாத பதற்றம்... பாகிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு..! பரபரப்பு...!
முசமில் சகிர் என்பவரையும் போலீஸ் கைது செய்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பகீர் தகவல் வெளியானது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மிகப்பெரும் சதித்திட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் அல்லாமல் தானும் உமர் முகமதுவும் சேர்ந்து கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக முசமில் சகிர் பரபரப்பு தகவலை கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு... என்ன தான் நடக்குது? சாட்டையை சுழற்றும் அமித்ஷா...!