டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரை ஒட்டி வந்த மருத்துவர் உமர் தொடர்பாகவும் அவரது தாய் மற்றும் சகோதரர்களை கைது செய்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கெத்து காட்டிய கத்தார்... தட்டித்தூக்கிய துருக்கி... பாக், ஆப்கான் மோதலுக்கு முடிவு...!
இந்த பதற்றம் தணிவதற்குள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நீதிமன்றம் அருகே நடந்த இந்த தாக்குதலில், படுகாயம் அடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல பிரிவினைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த பகல்காம் தாக்குதல் போர் பதற்றம் பல உயிரிழப்புகளுக்கு பிறகு ஓய்ந்தது. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: சல்மான் கான் தீவிரவாதி... பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு...! ரசிகர்கள் ஷாக்...!