அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருந்து அட்லாண்டாவுக்கு போன டெல்டா எயர்லைன்ஸ் விமானத்துல ஒரு பெரிய சம்பவம் நடந்துச்சு. இந்த விமானம், ஃபிளைட் DL446, ஒரு போயிங் 767-400, பறக்க ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துலயே இடது இன்ஜின்ல தீப்பிடிச்சு எரிஞ்சிருக்கு.
இதனால உடனே அவசரமா மறுபடியும் லாஸ் ஏஞ்சல்ஸ் (LAX) ரன்வேல திரும்பி தரையிறக்கப்பட்டுச்சு. இந்த சம்பவம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.
விமானம் மதியம் 2 மணி அளவுல LAX-ல இருந்து டேக்ஆஃப் ஆனது. பறந்து கொஞ்ச நேரத்துல, இடது இன்ஜின்ல இருந்து தீப்பொறிகளும் புகையும் வர ஆரம்பிச்சிருக்கு. இதை கவனிச்ச பைலட்டுங்க உடனே எமர்ஜென்ஸி அறிவிச்சு, ஏர் டிராஃபிக் கண்ட்ரோல்கிட்ட (ATC) பேசி, விமானத்தை திருப்பி கொண்டு வர முடிவு பண்ணாங்க.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை! காமுகனை பிடிப்பதில் என்ன அலட்சியம்? தவெக முற்றுகை போராட்டம்
கீழ இருந்து எடுக்கப்பட்ட வீடியோவுல, இன்ஜின்ல இருந்து தீப்பொறிகள் பறக்குறது தெளிவா தெரிஞ்சுது. இது பயணிகளுக்கு மட்டுமில்ல, தரையில இருந்தவங்களுக்கும் ஒரு பயமுறுத்துற அனுபவமா இருந்துச்சு.

விமானம் பசிபிக் கடல் மேல கொஞ்சம் பறந்து, பிறகு டவுனி, பரமவுண்ட் பகுதி வழியா திரும்பி LAX-க்கு வந்து பத்திரமா தரையிறங்கிச்சு. தரையிறங்கின உடனே, ஏர்போர்ட்டோட தீயணைப்பு படையினர் இன்ஜின்ல இருந்த தீயை அணைச்சாங்க. அதிர்ஷ்டவசமா, இந்த சம்பவத்துல யாருக்கும் காயம் இல்லை. 185 பயணிகளும், 6 க்ரூ மெம்பர்களும் பத்திரமா இருந்தாங்க. ஆனா, இந்த அனுபவம் எல்லாரையும் ஒரு மாதிரி அதிர்ச்சியில ஆழ்த்தியிருக்கு.
டெல்டா எயர்லைன்ஸ் உடனே ஒரு அறிக்கை வெளியிட்டு, “ஃபிளைட் DL446, இடது இன்ஜின்ல பிரச்சினை இருக்குறதோட அறிகுறி தெரிஞ்சதும், உடனே LAX-க்கு திரும்பி வந்திருக்கு. பயணிகளோட பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். இந்த அனுபவத்துக்காக மன்னிப்பு கேட்குறோம்”னு சொல்லியிருக்கு.
இந்த விமானம், 24 வருஷ பழைய போயிங் 767-400 (ரெஜிஸ்ட்ரேஷன் N836MH), ஜெனரல் எலக்ட்ரிக் CF6 இன்ஜின்களால் இயக்கப்படுது. இப்போ இந்த சம்பவத்தை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விசாரிச்சுட்டு இருக்கு. தீ எதனால பிடிச்சுது, இன்ஜின் ஏன் திடீர்னு பிரச்சினை பண்ணுச்சுன்னு இன்னும் தெளிவா தெரியல.
இது இந்த வருஷத்துல டெல்டாவுக்கு நடந்த ரெண்டாவது இன்ஜின் தீ சம்பவம். ஜனவரில, ஃபிளைட் DL105, ஒரு ஏர்பஸ் A330neo, பிரேசிலுக்கு போய்ட்டு இருக்கும்போது இதே மாதிரி இன்ஜின் பிரச்சினை வந்து, அட்லாண்டாவுக்கு திரும்ப வேண்டியதாச்சு. இந்த வருஷம் ஏவியேஷன் துறையில பல சம்பவங்கள் நடந்திருக்கு, அதனால பயணிகளோட நம்பிக்கை கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனாலும், டெல்டாவோட பைலட்டுங்க, க்ரூ மெம்பர்ஸ், இந்த சம்பவத்தை சாமர்த்தியமா கையாண்டு, பெரிய ஆபத்தை தவிர்த்திருக்காங்க.
இதையும் படிங்க: வெடித்து சிதறிய கார் டயர்...ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 உயிர்கள் பறிபோன சோகம்!