காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு பேருந்தில் பயணித்தார். பயணத்தை முடித்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர், தனது பையைத் திறந்து பார்த்தபோது, அதில் இருந்த நான்கு சவரன் தங்க நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
காவல் துறையின் விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரான பாரதி என்பவர் இந்தத் திருட்டில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விசாரணையில், அவர் மீது வேறு பல காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது,

நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல் திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைக் ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச் செயல்களில் திமுக-வினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது என்றும் சாடினார். திருட்டு, கொள்ளை எல்லாம் தெரிந்திருந்தால் தானே அரசுப் பொறுப்புகளுக்கு வந்து, திமுக-வின் கொள்கையான கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷனை முறையாக செயல்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மீண்டும் பாஜக கூட்டணியில் அமமுக... ஆனா பாஜகவிற்கு டிடிவி தினகரன் போட்ட 3 முக்கிய கன்டிஷன்கள்...!
இப்படிப்பட்டவர்களைக் கொண்டிருக்கும் கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளில் எல்லாம் மக்கள் சொல்லும் பதில் இல்லை என்று குறிப்பிட்டார். நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING: என்கிட்ட விளக்கம் கேட்டீங்களா? அவங்களே முடிவு பண்ணிட்டாங்க... செங்கோட்டையன் ஆதங்கம்