திமுக இளைஞரணி அதிகாரப்பூர்வமாக 1980 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு, திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது. முதலில் ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னர் திமுக இளைஞரணியாக மாறி, கழகத்தின் முக்கிய அங்கமாக உருவெடுத்தது.
இந்த இளைஞரணியின் தொடக்கத்திற்கு முக்கிய பொறுப்பேற்றவர், தற்போதைய திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆவார். 1980 இல் தொடங்கப்பட்ட இந்த இளைஞரணி, இந்திய அரசியலில் ஒரு மாநிலக் கட்சியால் உருவாக்கப்பட்ட முதல் இளைஞரணியாகக் கருதப்படுகிறது என்று பலர் கூறினாலும், இந்திய காங்கிரஸ் கட்சி 1950களில் இருந்தே இளைஞர் அணியை உருவாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக இளைஞரணியின் தொடக்கம், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இளைஞர்களிடையே பரப்புவதற்கும், அவர்களை அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஈடுபடுத்துவதற்கும் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது. திமுக இளைஞரணி, கழகத்தின் ‘போர்ப்படை’ மற்றும் ‘பாதுகாப்பு அரணாக’ விளங்குகிறது. இது இளைஞர்களை அரசியல் பயிற்சி பெறவைக்கும் ஒரு பாசறையாகவும், தமிழர் இன மானத்தை கூர்தீட்டும் பட்டறையாகவும் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி படம்! இதுதான் சமூக நீதியா? பூந்து விளாசிய நெட்டிசன்ஸ்
இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக இளைஞரணியை தாய்மடி என்று நெகிழ்ந்து கூறியுள்ளார். இளைஞரணி 46 ஆண்டுகளாக சிறிதும் இளைப்பாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் இந்த இளைஞர் படையின் தலைவராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயலாற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். கட்டுப்பாடு கலையாமல் கொள்கை1 உறுதியோடு இளைஞர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்றும், பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோரின் திராவிட முழக்கங்களை எதிரிகளுக்கு எச்சரிக்கையாகவும், எளிய மக்களுக்கு பாடமாகவும் வழங்கிக்கொண்டிருக்கும் இளைஞரணித் தம்பிகள் அனைவருக்கும் உங்களில் இருந்து வந்தவனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் கொள்வதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: அட்ரா சக்க! பசுமை வீடு, மா தொழிற்சாலை....மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்!