தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் அரசியல் சுற்று பயணத்தை திருச்சியில் தொடங்கி இருக்கிறார். அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது காவல்துறை. அதையும் மீறி தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை துவங்க இருக்கிறார். இன்று முதல் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பரப்புரையைமேற்கொள்ள இருக்கிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில தன்னுடைய முதல் தேர்தல் பரப்புரையை விஜய் அவர்கள் தொடங்க இருக்கிறார். இன்று திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நேரடியாக சென்று பல்வேறு பகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். சரியாக காலை 10:30 மணி அளவில திருச்சி மரக்கடை பகுதியில விஜய் வருகை தருவார்னு எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வருகை தரக்கூடிய அவர் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே மக்களிடையே உரையாற்றவிருக்கிறார். இந்த ஒரு சூழலில் தான் காலை முதலே இந்த பகுதியில் ஏராளமான தொண்டர்கள் ரசிகர்கள் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். ஏராளமான பெண்கள் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
சத்திரம் பேருந்து நிலையத்தையும் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கக்கூடிய ஒரு முக்கியமான சாலையாக இருக்கிறது மரக்கடை பகுதியில், நகர்ப்புறத்தில இயக்கப்படக்கூடிய பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தவெக தொண்டர்களின் வருகையால் இப்பகுதி முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. திருச்சி பிரச்சாரத்திற்கு விஜய்க்கு 23 கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருக்கிறது. விஜயுடைய வாகனத்திற்கு பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் எந்த ஒரு வாகனமும் அனுமதிக்கப்படாது. விஜய் வாகனத்திற்கு முன்னும் பின்னும் தொண்டர்கள் வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது போடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பகீர் கிளப்பிய கிட்னி முறைகேடு! இன்னும் நடவடிக்கை எடுக்கல... போராட்டத்தில் குதித்த அதிமுக
ஏராளமான தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். எனவே இரண்டுபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சியை பொறுத்தமட்டில் 1500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட தொடர்ந்து வாகனங்களுடைய எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால கடுமையான போக்குவருத்து நெரிசல் என்பது தற்போதே நிலவுகிறது.
மற்றொருபுறம் திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் இன்று மக்களை சந்திக்க உள்ள நிலையில் அங்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. காலை முதலே தொண்டர்கள் அதிக அளவில் குவிந்திருந்தார்கள். முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் , அங்கு இருக்கக்கூடிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்த பகுதியை பொறுத்தவரையில மரக்கடை அதாவது இங்கு கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்த கடைகள் மர கட்டைகளை கொண்டு நாற்காலிகள், மேசைகள், உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பல்வேறு விதமான அந்த மரச்சாமான்கள் செய்யக்கூடிய, பல உபகரணங்களை செய்யக்கூடிய கடைகள் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதனால்தான் இந்த பகுதியை மரக்கடை என்று அழைக்கப்படுகின்றது. இந்த கடைகள் அனைத்துமே தற்போது விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் டிரைவர் மேல எதிர்க்கட்சித் தலைவருக்கு காழ்ப்புணர்ச்சி ஏன்? MLA எழிலன் கேள்வி..!