ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22, 2025 அன்று பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களும், அவற்றுக்கு உதவியாக இருந்த ராணுவ தளங்களும் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நான்கு நாள் தீவிர மோதல் நடந்தது. பாகிஸ்தான் ராணுவம் கோரிக்கை வைத்ததால், இந்தியா தாக்குதலை நிறுத்தியது. ஆனால், இந்த மோதல் நிறுத்தத்துக்கு தான் காரணம்னு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொல்லி, வர்த்தக ஒப்பந்தங்களை மிரட்டியாகப் பயன்படுத்தி இரு நாடுகளையும் அமைதிப்படுத்தினேன்னு பெருமைப்பட்டார். ஆனா, இதை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமா மறுத்துட்டார், இது இரு நாட்டு ராணுவங்களின் நேரடி பேச்சுவார்த்தையால மட்டுமே நடந்ததுன்னு சொன்னார்.
இந்த மறுப்பு டிரம்புக்கு கோபத்தை கிளப்பியிருக்கு. இதனால, இந்தியாவோட இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதிச்சு உத்தரவு போட்டிருக்கார். இதனால இந்தியா-அமெரிக்க உறவுல பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கு. இந்த சூழல்ல, முன்னாள் இந்திய தூதர் விகாஷ் ஸ்வரூப், இந்த மனக்கசப்பு விரைவில் தீரும்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்கார். அவர் சொல்றதுல முக்கியமான விஷயம், டிரம்போட இந்த கோபத்துக்கு மோடியோட மறுப்பு மட்டுமல்ல, இந்தியாவோட சில கொள்கை முடிவுகளும் காரணம்னு கூறியிருக்கார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கான வரியை நிறுத்த யோசிப்பேன்!! புடின் சந்திப்புக்கு பின் மனம் மாறும் ட்ரம்ப்!!

முதல் காரணம், இந்தியா-பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததுக்கு டிரம்போட தலையீடு தான் காரணம்னு அவர் சொன்னதை இந்தியா மறுத்தது. ஆனா, பாகிஸ்தான் இதுக்கு எந்த மறுப்பும் சொல்லாம, டிரம்புக்கு அமைதிக்காக நோபல் பரிசு கொடுக்கணும்னு முகஸ்துதி பாடியிருக்கு. இது டிரம்போட கோபத்தை இந்தியா மீது திருப்பியிருக்கு.
இரண்டாவதா, இந்தியா ‘பிரிக்ஸ்’ அமைப்புல உறுப்பு நாடாக இருக்குறது டிரம்புக்கு பிடிக்கலை. பிரிக்ஸ் நாடுகள், அமெரிக்க டாலருக்கு மாற்றா ஒரு பொது கரன்சியை உருவாக்க முயற்சிக்கிறது டிரம்புக்கு கவலை கொடுக்குது. மூணாவதா, இந்தியாவோட வேளாண், பால்வள துறைகளில் அமெரிக்க பொருட்களை நுழைக்க டிரம்ப் முயற்சி செஞ்சார், ஆனா மோடி அதுக்கு முட்டுக்கட்டை போட்டுட்டார். இந்தியா டிரம்போட வர்த்தக அழுத்தங்களுக்கு சிறிதும் வளையலை, இது ஒரு சரியான முடிவுன்னு ஸ்வரூப் பாராட்டியிருக்கார்.
இதோட, பாகிஸ்தான் கிரிப்டோ கரன்சி மூலமா அமெரிக்காவை தன்னோட பக்கம் இழுத்திருக்குற முயற்சியை ஸ்வரூப் சுட்டிக்காட்டியிருக்கார். ஆனா, இந்த உறவு நிதி ஆதாயத்துக்காக மட்டுமே இருக்குறதால, நீண்ட காலம் நீடிக்காதுன்னு அவர் சொல்றார். பாகிஸ்தான் எப்பவுமே சீனாவோட நெருக்கமா இருக்குறதால, அமெரிக்கா அதை முழு நம்பிக்கையோட தன்னோட நட்பு வட்டத்துல வைக்காதுன்னும் அவர் தெளிவு படுத்தியிருக்கார்.
இந்தியாவை பொறுத்தவரை, மோடியோட இந்த உறுதியான நிலைப்பாடு, நம்ம நாட்டோட சுயாட்சியையும், பொருளாதார நலன்களையும் பாதுகாக்க உதவியிருக்கு. ஆனா, 50% வரி விதிப்பு நம்ம ஏற்றுமதி துறையை, குறிப்பா ஜவுளி, தோல் பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றை பாதிக்கலாம். இந்தியா இப்போ மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளோட வர்த்தகத்தை பலப்படுத்தி, அமெரிக்காவோட சார்பை குறைக்க முயற்சிக்குது. ஸ்வரூப் சொல்ற மாதிரி, இந்த மனக்கசப்பு தற்காலிகமானதா இருக்கலாம், ஆனா இந்தியா-அமெரிக்க உறவு முழுமையா சரியாகுறதுக்கு இன்னும் நேரம் ஆகலாம்.
இதையும் படிங்க: விண்வெளி பயணத்துக்கு அப்புறம் இதான் முதல்முறை!! இதயத்துல அப்படி ஒரு உணர்வு.. நெகிழ்ச்சியில் சுபான்ஷு சுக்லா!!