உருக்குலைந்து, சிதிலமடைந்து, உணவுக்கு வழி இன்றி தவிக்கும் காசா மீது நாள்தோறும் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்களில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து வருகிறார்கள். பள்ளிகள், மருத்துவமனைகள், மக்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிகள் என எதையும் விட்டு வைக்காமல் வான் வழியாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அப்பாவிகள் செத்து மடிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் முகாமாக செயல்பட்டு வந்த பள்ளி, இரண்டு வீடுகளின் மீது குண்டுகள் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: போர் கொடுமை...மரணத்தின் விளிம்பில் 14 ஆயிரம் குழந்தைகள்... ஐ.நா எச்சரிக்கை!

உயிருக்கு போராடி, உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் மாட்டு வண்டி, கார்கள், ஸ்ட்ரெச்சர்கள் மூலம் குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் காட்சிகள் மனதை உலுக்கும் வகையில் உள்ளது.

மேலும் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள் பார்த்து கதறி அழும் பெற்றோர்களின் காட்சிகள் மனதை நொறுக்கும் வகையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இஸ்ரேல் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என உலக நாடுகள் எச்சரித்தும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் இஸ்ரேல் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: போர் கொடுமை...மரணத்தின் விளிம்பில் 14 ஆயிரம் குழந்தைகள்... ஐ.நா எச்சரிக்கை!