இஸ்ரேல்-ஹமாஸ் போர் அமெரிக்க அமைதி திட்டத்தின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, காசா மக்கள் நிம்மதியை எதிர்பார்த்திருக்கும் நிலையில், உள்நாட்டு சண்டை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கும், செல்வாக்கு மிக்க ஆயுதக் குழு டக்முஷ் பிரிவினருக்கும் இடையே சப்ரா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், இந்த மோதல் காசாவில் பதற்றத்தை தொடரச் செய்துள்ளது.
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான இரண்டு ஆண்டுகள் போர், அமெரிக்காவின் அமைதி திட்டத்தால் தற்காலிக போர் நிறுத்தத்துடன் முடிந்தது. இந்நிலையில், சப்ரா பகுதியில் ஹமாஸ்-டக்முஷ் பிரிவுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது.
இதையும் படிங்க: எடப்பாடி 'OUT' விஜய் ‘IN' - பீகார் தேர்தல் பார்முலாவை கையில் எடுக்கும் அமித் ஷா...!
டக்முஷ் பிரிவைச் சேர்ந்த 19 பேர் உட்பட 32 பேர் இறந்தனர். ஹமாஸ் ஆதரவு சமூக ஊடக பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு தரப்பும் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதால், அப்பகுதி பதற்றமானது.
டக்முஷ் பிரிவு, காசாவில் நீண்டகாலமாக ஹமாஸுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. கடந்த காலங்களில் பலமுறை சண்டைகள் நடந்துள்ளன. சமீபத்தில் இரண்டு ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும், குறிப்பிட்ட பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரவும் ஹமாஸ் இம்மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. டக்முஷ் பிரிவு, ஹமாஸின் ஆதிக்கத்தை எதிர்க்கும் சிறிய ஆயுதக் குழுவாக அறியப்படுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஹமாஸின் பயங்கரவாத செயல்களால் தொடங்கி, இரு தரப்பும் பெரும் இழப்புகளை சந்தித்தது. அமெரிக்காவின் அமைதி முயற்சியால் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. ஆனால், உள்நாட்டு மோதல்கள் போர் நிறுத்தத்தின் நீடிப்புக்கு சவாலாக மாறியுள்ளன. காசா மக்கள், போர் முடிந்த பின் நிம்மதியை எதிர்பார்த்தபோது, இந்த சம்பவம் தலையில் இடி விழுந்தது போல் அமைந்தது.
இந்த மோதல், காசாவின் உள்நாட்டு அமைதியை பாதிக்கலாம் என அச்சம் நிலவுகிறது. ஹமாஸ், டக்முஷ் பிரிவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம். உலக அமைதி அமைப்புகள் கவனிக்கின்றன.
இதையும் படிங்க: ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி... எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி... உண்மையை மறைக்க பாக்குறாங்க! இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!