தமிழ்நாட்டில் முடி மாற்று அறுவை சிகிச்சை மையங்களுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை. கடந்த சில ஆண்டுகளாகவே முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வாக முடி மாற்று சிகிச்சை மிகவும் பிரபலமடைந்து வந்தது. சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஏராளமான கிளினிக்குகள் முளைத்தெழுந்தன.
ஆனால், இவற்றில் பல இடங்களில் தகுதியற்றவர்கள், போலி மருத்துவர்கள் அல்லது போதிய பயிற்சியில்லாதவர்களால் சிகிச்சை செய்யப்பட்டதால், பலருக்கு தொற்று, வடு, முடி சரியாக வளராமல் போவது, சில சமயங்களில் உயிருக்கு ஆபத்து கூட ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

எனவே, Hair Transplant மையங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உள்ளது. முடி மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளை கடைபிடித்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை தெரிவித்து உள்ளது. பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் மட்டுமே முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் MCh DNB அல்லது தோல் மருத்துவத்தில் MD DNB பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!
அறுவை சிகிச்சை அறை பகுதிக்குள் ஒரு மயக்க மருந்து நிபுணர் இருப்பதும், தேவையான மயக்க மருந்துகள் உடனடியாக கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் புதிதாக மருத்துவமனைகளைப் பதிவு செய்வதற்கு சுகாதாரத் சான்றிதழ்கள், உயிர் மருத்துவக் கழிவு ஒப்பந்தம், கட்டிட நிலைத் தன்மை உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!