இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடனுதவியை வழங்க சர்வதேச பண நிதியம் (ஐஎம்எப்) நேற்று ஒப்புதல் வழங்கியது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன் உண்மையான நோக்கத்துக்கு செலவிடப்பாடது, எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்காகவே செலவிடப்படும் ஆதலால் கடன் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி ஐஎம்எப் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது.

இதன்படி பாகிஸ்தானுக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதி(இஎப்எப்) திட்டத்தில் 100 கோடி டாலர் மற்றும் நிலைத்தன்மை வசதிக்கடனாக 130 கோடி டாலர் கடனுதவியை வழங்க ஐஎம்எப் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இதையும் படிங்க: ஐஎம்எப்-ன் நியமன இயக்குநர்.. இந்தியா சார்பில் பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை?
சர்வதேச பண நிதியம் சார்பில் 100 கோடி கடனை தவணை முறையில் பாகிஸ்தானுக்கு வழங்க முடிவு செய்தமைக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மனநிறைவு அடைந்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானின் பொருளாதார சூழல் மேம்படும், வளர்ச்சியை நோக்கி நாடு நகரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஐஎம்எப் சார்பில் வழங்கப்பட்ட கடனுதவியை முந்தைய காலங்களில் முறையாக செலுத்தவில்லை, வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட கடனில் பெரும்பகுதியை தீவிரவாதத்தை வளர்க்கவும், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கும் பாகிஸ்தான் செலவிட்டுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐஎம்எப் சார்பில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துவிட்டது. விதிகளின்படி வாக்களிக்காமல் இருக்க உரிமை இல்லை, இருப்பினும் இந்தியாவின் அதிருப்தியை பதிவு செய்த ஐஎம்எப், வாக்களிப்பில் இருந்து புறக்கணித்தலாக பதிவு செய்தது.
பாகிஸ்தான் குறித்து ஐஎம்எப்பில் இந்தியா என்ன பேசியது?
சர்வதேச பணநிதியத்திலிருந்து நீண்டகாலமாக கடன் பெறும் நாடாக பாகிஸ்தான் இருக்கிறது, ஆனால் ஐஎம்எப் விதிகளையும் திட்டங்களையும் பாகிஸ்தான் அமல்படுத்தியது ில்லை. கடந்த 1989ம் ஆண்டிலிருந்து 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகளாக ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 4 திட்டங்களுக்கு கடன் வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் கோரிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அடுத்ததாக திவாலுக்கு எதிரான கடனை ஐஎம்எப்பிடம் பாகிஸ்தான் கேட்காது. ஆனால் வளர்ச்சிப்பணிகளில் பாகிஸ்தானின் ராணுவத்தின் தலையீடு இருப்பதால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியவில்லை.
வளர்ச்சித் திட்டங்களுக்கு ஐஎம்எப் சார்பில் வழங்கப்படும் கடனுதவி பெரும்பகுதி இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வளர்க்கவே பயன்படுத்தப்படுகிறது. இது உலகளவில் உள்ள நிதி உதவி நிறுவனங்களையும், சர்வதேச மதிப்புகளையும் கேலிக்குரியதாக்குகிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய இந்தியா... ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது இடம்!!