இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் போர் ஒத்திகையை நாளை (7ம் தேதி) நடத்தும்படி மத்திய அரசு உத்தரிவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடக்க இருக்கிறது, இந்த ஒத்திகையில் என்ன நடக்கும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

போர் ஒத்திகை என்பது ஒருவேளை பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டால், அந்த நேரத்தில் ஒவ்வொரு மாநில அரசும் மக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மக்கள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தயார் நிலையில் எதை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து பயிற்சிஅளிக்கப்படும். தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் போர் ஒத்திகை நடத்துவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ‘மேக் இன் இந்தியா’வை மேம்படுத்தும் ஆப்பிள்.. அமெரிக்காவில் விற்கப்போகும் இந்தியா மேட் ஐ-போன்கள்..!

பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டபின் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு ராஜாங்கரீதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எல்லைகளை மூடல், பாகிஸ்தான் மக்களை வெளியேற்றியது, தூதரக உறவுதுண்டிப்பு, வர்த்தக போக்குவரத்து,விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து நிறுத்தம், வான்வெளி மூடல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியிருப்பதையடுத்து, இரு நாடுகளையும் சமாதானம் செய்யும் நடவடிக்கையில் ஐ.நா. இறங்கியுள்ளது. தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் செயல்படும் இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்,வளைகுடா நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில் நாடுமுழுவதும் போர் ஒத்திகையை நாளை (7ம்தேதி) அனைத்து மாநிலங்களும் நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக 244 சிபில் பாதுகாப்பு மாவட்டங்களிலும் தேசிய அளவிலும், கிராமங்கள் அளவிலும் போர் ஒத்திகை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த போர் ஒத்திகையில் மாவட்ட கட்டுப்பாட்டாளர்கள், மாவட்ட அதிகாரிகள், பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், ஹோம்கார்டு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும், என்சிசி, என்எஸ்எஸ், என்ஒய்கேஎஸ், மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்திகையில் என்ன செய்யப்படும்?
போர் அல்லது பாதுகாப்பு ஒத்திகையில் 9 விஷயங்களை செய்யக்கூறி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறனை மதிப்பிடுவதும், வான்வழித் தாக்குதல்கள்களை எதிர்கொள்ள மக்களை தயார்படுத்துவது.
2. இந்த போர் பயிற்சியின்போது, இந்திய விமானப்படையின் ஹாட்லைன், ரேடியா தொடர்புகளை செயலில் வைத்திருப்பது
3. கட்டுப்பாட்டு அறை, துணைக் கட்டுப்பாட்டு அறை சரியாக இயங்குகிறதா என்ற பரிசோதனை
4. எதிரிநாட்டு தாக்குதல் நடத்தினால் எவ்வாறு பதில் அளிப்பது, பாதுகாப்பது குறித்து மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி

5. பயிற்சியின்போது எதிரி நாட்டு விமானங்களுக்கு தெரியாத வகையில் மின்சாரத்தை துண்டிப்பது, மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மின் விளக்குகளை ஏன் அணைத்திருக்க வேண்டும் என்ற விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்படும்.
6. இந்தப் பயிற்சியானது, விமான நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ரயில் யார்டுகள் போன்ற முக்கிய நிறுவனங்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது குறித்தபயிற்சி.
7. தீயணைப்பு பிரிவு, மீட்டுப்படை, பேரிடர் மீட்புப்படையை தயாராக வைத்திருத்தல், குறிப்பிட்ட இடத்திலிருந்து மக்களை எவ்வாறு விரைவாக வெளியேற்றுவது குறித்த பயிற்சி
8. அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் செல்வது, வெளியேற்றும் பயிற்சிகள் ஒத்திகை.
9. முதலுதவிகளை எவ்வாறு வழங்குவது குறித்து மக்களுக்கு பயிற்சியும், தீயணைப்பு நடவடிக்கைகள், கட்டிட இடிபாடுகளை எவ்வாறு அகற்று குறித்த பயிற்சியும் அளிக்கப்படும்.
இதையும் படிங்க: சொல்லி அடிக்கும் பலுசிஸ்தான்..! உள்நாட்டு கலவரத்தால் நிம்மதி இழந்த பாக்., 90 வீரர்கள் மரணம்..!