இந்தியா-இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக சிறந்த உறவுகள் நீடித்து வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை இன்று பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமே இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திடுவது ஆகும். மூன்று ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஒப்பந்தம் தோல் பொருட்கள், காலணிகள், ஆடைகள் போன்ற இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கான வரியை குறைக்கும். அதேசமயம் பிரிட்டனின் விஸ்கி மற்றும் கார்களின் இறக்குமதி வரியையும் குறைக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை..!!
லண்டனில் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையேயான விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா-இங்கிலாந்து உறவு வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

பிரதமர் மோடி தனது பயணத்தின்போது, “இந்தியா-இங்கிலாந்து உறவில் இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்” எனக் கூறி, இந்த ஒப்பந்தம் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் என தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு, தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணம் இந்தியா-இங்கிலாந்து உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், 2030-ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்தப் பயணம் உலகளாவிய மேடையில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் உயர்த்துவதாக அமைந்தது.
இதையும் படிங்க: “உஷாரய்யா.. உஷாரு... ஓரஞ்சாரம் உஷாரு...” - மக்களுக்கு உயிர் பயம் காட்டும் அதிமுக...!