அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில், ஈரானின் பல ராணுவ தளபதிகள், பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக போர் தொடர்ந்த நிலையில், ஞாயிறன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.

இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், புதனன்று இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது. போர் முடிவு பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை முதலில் நிராகரித்த ஈரான், பின்னர் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. தாக்குதல் தொடங்கிய 13ம் தேதியே ஈரானின் உச்ச தலைவர் கமெனியும் அவரது குடும்பத்தினரும் அவசர அவசரமாக ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: ஈரானுக்கு இதான் லாஸ்ட் வார்னிங்.. கொஞ்சமும் லேட் பண்ணாதீங்க.. கடுகடுக்கும் அமெரிக்கா..!
போர் முடிந்து 3 நாட்களாகியும் கமெனி பற்றிய தகவல் இல்லாததால் அவர் எங்கே என மக்கள் கேட்க தொடங்கினர். இந்த நிலையில் கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறினார்.

கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம். இதனை அறிந்து கொண்ட அவர், நிலத்துக்கு அடியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கினார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதில் வந்தவர்களுடனான தொடர்பையும் அவர் துண்டித்து கொண்டார். இதனால், எங்களது முயற்சி சாத்தியம் இல்லாமல் போனது.போரின் போது, தீவிரமாக அவரை தேடினோம். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம்அல்ல. தலைமையை மாற்றுவதே நோக்கம். கமேனியை கொல்வதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏதும் தேவையில்லை என்றார்.

இந்த நிலையில் இஸ்ரேல் உடனான போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் அயதுல்லா கொமேனி தோன்றியுள்ளார். அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர். தெஹ்ரானில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீடுக்கு அருகே மசூதி ஒன்றிற்குள் நுழைந்து அமரும் காட்சியை ஈரானின் தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது.
அவர் கூட்டத்தினரை நோக்கி கையசைத்தும், கோஷம் எழுப்பிய மக்களை நோக்கி தலையாட்டியபடியும் சென்றார். அப்போது, அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர். எனினும், அவர் பொதுமக்களுக்கு அறிக்கை விட்டது பற்றியோ வேறு எந்தவித தகவலோ உடனடியாக வெளிவரவில்லை.
இதையும் படிங்க: அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்! புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்? உலக நாடுகள் அச்சம்..!