இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்டனில் சந்தித்தார். இந்தப் பயணம், உக்ரைன், நேட்டோ பாதுகாப்பு செலவினங்கள், மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மெலோனி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாலமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு, தனது தலைமைப் பாத்திரத்தை வலுப்படுத்த முயற்சித்தார். இந்த சந்திப்பு, ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஐரோப்பிய தலைவர்களுடனான முதல் முக்கியமான கூட்டமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்தியாவின் பாரம்பரிய வணக்கமான ‘நமஸ்தே’ முறையில் வணக்கம் தெரிவித்து உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மூத்த ஆலோசகரைச் சந்தித்தபோது, மெலோனி கைகளைக் கூப்பி ‘நமஸ்தே’ என்று வணக்கம் தெரிவித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்தியப் பண்பாட்டின் அடையாளமான இந்த வணக்க முறை, உலக அரங்கில் இந்தியாவின் கலாசார செல்வாக்கைப் பறைசாற்றியது.
இதையும் படிங்க: மீண்டும் இந்தியா - பாக்., போர்!! புது குண்டை போடும் அமெரிக்கா!! போர் நிறுத்தம் அம்புட்டுத்தானா?
இந்த நிகழ்வு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது. இத்தாலியில் இதற்கு முன்பு நடந்த ஜி7 உச்சி மாநாட்டின்போது, வருகை தந்த தலைவர்களை இதேபோன்று நமஸ்தே என கூறி மெலோனி வரவேற்றார். இந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயான தோழமை மற்றும் அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் சமூக ஊடகத்தில் வைரலானதுடன், #Melodi என்ற ஹேஷ்டேக்கும் பிரபலமடைந்தது. அவர்கள் இருவரும் செல்பி எடுத்து கொண்டனர்.
https://x.com/i/status/1957747898260631672
துபாயில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டின்போது இருவரும் செல்பி எடுத்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படம் ஒன்றை பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நல்ல நண்பர்கள் என்றும் #Melodi என்றும் பதிவிட்டார். இந்தியாவும் இத்தாலியும் குடிபெயர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.
மெலோனியின் இந்த செயல், உலகத் தலைவர்களிடையே இந்திய கலாசாரத்தின் ஏற்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. சமூக வலைதளங்களில், “மோடியின் தாக்கம்” என்று பலரும் இதைப் புகழ்ந்தனர். இந்தியாவின் பாரம்பரிய மதிப்புகளை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் முயற்சிகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மெலோனியின் இந்த ‘நமஸ்தே’ வணக்கம், கலாசாரப் பரிமாற்றத்தையும், பன்முகத்தன்மையையும் கொண்டாடும் ஒரு தருணமாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இராஜதந்திர உறவுகளில் கலாசார மரியாதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தது. இந்த நிகழ்வு, இந்தியாவின் மென்மையான சக்தி (Soft Power) உலக அளவில் வளர்ந்து வருவதை உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: ஐரோப்பிய தலைவர்கள் துணையுடன் சென்ற ஜெலன்ஸ்கி!! வெள்ளை மாளிகையில் ட்ரம்புடன் சந்திப்பு!!