பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் ராணுவ மேஜரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் நடந்த பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த டான் ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை கிளப்பி உள்ளது.

இது குறித்த மருத்துவ குறிப்புகளும் வெளியாகி உள்ளன. அதில், "பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஒருவரால் இம்ரான் கான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கைதிகளிடையே ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த அறிக்கை வந்த பிறகு, பாகிஸ்தான் மருத்துவர்கள் குழு அடியாலா சிறைக்குச் சென்று அவரது மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டது. சோதனை 30 நிமிடங்கள் நீடித்தது.
இதையும் படிங்க: சுற்றுலா போறீங்களா?... நாளை முதல் கொண்டாட்டம் ஆரம்பம்... மிஸ் பண்ணிடாதீங்க!

இம்ரான் கானின் கட்சியின் மற்றொரு தலைவர், இம்ரான் கான் தனது சகோதரிகளையோ, பிற உறவினர்களையோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இம்ரான் கானின் குடும்ப மருத்துவர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இது அவரது உடல்நிலை குறித்து கவலையை எழுப்புகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
72 வயதான கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான்கான் 2022-ல் பதவியில் இருந்து விலகியது முதல் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது வரை அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் முதன்முதலில் மே 2023-ல் தனது மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவர் பதவியில் இருந்தபோது 2018-ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் 7 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, நிலம் தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்டதாக பராமரித்து வருகிறது. மூன்று நாட்கள் சிறையில் இருந்தார் இம்ரான் கான். அவரது ஆதரவாளர்கள் இராணுவம், பிற அரசு நிறுவனங்களைத் தாக்கி தீ வைத்தனர். வன்முறையில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார். இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் பலருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோதல்கள் தொடர்பான மூன்று வெவ்வேறு வழக்குகளில் அதிகாரிகள் அவருக்கு புதிய கைது வாரண்டுகளை பிறப்பித்தனர்.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பெற்ற 140 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை விற்றதாகக் கூறி ஆகஸ்ட் 2023-ல் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தவறு செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 20 இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் பிற வழக்குகள் தொடர்பாக அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. துக்க நிகழ்வாக மாறிய திருவிழா..!