சென்னையின் நந்தம்பாக்கத்தில், ரூ.249 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரம் (Fintech Tower) தமிழ்நாட்டின் நிதித்துறை மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது. இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை திறந்து வைக்கவுள்ளார். இந்த கோபுரம் Fintech City எனப்படும் 56 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய திட்டத்தின் முதன்மை அங்கமாக உள்ளது.
intech City-யை தமிழ்நாடு தொழில்மேம்பாட்டுக் கழகம் முன்னெடுத்து வருகிறது. இதன் நோக்கம் வங்கி, நிதி சேவைகள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் புதிய நிதிநுட்ப நிறுவனங்களுக்கு உலகத் தரத்திலான இடத்தை உருவாக்குவது. நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மையத்துக்கு அருகில், மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள இந்த இடம் விமான நிலையம், மெட்ரோ போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட இணைப்புகளுடன் மிகவும் சாதகமான இடத்தில் உள்ளது.

நிதிநுட்ப கோபுரம் சுமார் 5.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த கோபுரம் LEED Platinum தர சான்றிதழை நோக்கமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. 2023 ஜூன் 17-ஆம் தேதி முதலமைச்சரால் திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இன்று நான் திறந்து வைக்கவுள்ள ரூ.249 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 குடியிருப்புகளின் படங்கள் என்று கூறி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!
அனைத்து sector-களையும் வளர்த்தெடுக்கும் All-rounderதான் திராவிட மாடல் என்றார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!