அரை நூற்றாண்டுக்குப் பிறகு நாசா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலம் இன்று விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இவர்கள் நிலவை சென்றடைய 2 ஆண்டுகள் ஆகும் என்றும், அங்கு அவர்கள் 10 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
1960ம் ஆண்டு அப்பல்லோ விண்கலம் மூலம் மனிதர்களை நிலவிற்கு அனுப்பிய அதே புளோரிடா ஏவுகணை தளத்தில் இருந்து ஆர்டெமிஸ் II தனது பயணத்தை தொடங்கியுள்ளது. சுமார் 248,000 மைல்கள் (400,000 கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ள நிலவை நோக்கி ராக்கெட்டானது இந்திய நேரப்படி இன்று காலை 3.54 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையை சுற்றிவந்த பிறகு, நிலவை நோக்கி செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் 'ஓரியன்' விண்கலம் நிலவை சுற்றி வந்த பின்னர் பூமிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலவில் நிரந்தரமான ஆராய்ச்சி மையம்!! 2030தான் டார்கெட்!! சொல்லி அடிக்கும் நாசா!!
அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீண்டும் நிலவுக்கு சாட்டிலைட்களை அனுப்பி ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை எடுத்தது. இதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது அந்த முயற்சியில் அமெரிக்கா வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 110 கிமீ வேகத்தில் பறக்கப்போகுது... இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி...!