அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா (NASA), நிலவை மையமாகக் கொண்டு தனது நீண்டகால விண்வெளி இலக்குகளை முன்னெடுத்து வருகிறது. அந்த முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக, மனிதர்களை நிலவுக்கு அழைத்து செல்லும் ஆர்கிமெடிஸ்-2 (Artemis II) திட்டம் இந்த ஆண்டுக்குள் செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விண்கலத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முக்கியமான முயற்சியாக கருதப்பட்ட ஆர்கிமெடிஸ்-2 (Artemis II) திட்டம் தாமதமாகியுள்ளது என்பதால், விண்வெளி ஆராய்ச்சி துறையில் இது ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நிலவை சுற்றி ஒரு விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தையும் நாசா (NASA)கைவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக, நிலவில் நிரந்தரமான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கும் புதிய இலக்கை நிறுவனம் முன்வைத்துள்ளது. இது எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரினையை கடக்க கட்டணம் வசூலிக்க திட்டம்!! ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்!

இந்த புதிய திட்டத்திற்காக அமெரிக்க அரசு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி (20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர நிலா ஆராய்ச்சி மையத்தை 2030ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜேரட் ஐசன்மேன் (Jared Isaacman) தெரிவித்துள்ளார்.
நிலவில் மனிதர்களின் நீண்டகால இருப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது வெறும் ஆராய்ச்சி மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பிற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கும் அடிப்படையாக அமையும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில், ஒரு புறம் ஆர்கிமெடிஸ்-2 (Artemis II) திட்டம் தாமதமாகியுள்ள நிலையில், மறுபுறம் நிலவில் நிரந்தர மையம் அமைக்கும் புதிய இலக்கு, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாதையை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு மட்டுமே அனுமதி!! ஹார்முஸ் நீரினையை திறந்த ஈரான்!! நட்புக்கரம்!!