நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன. கடந்த செப்டம்பர் 4ம் தேதி, நேபாள அரசு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களை தடை செய்தது. இந்த தளங்கள் அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யத் தவறியதாக அரசு குற்றம்சாட்டியது.

அரசு இதை தவறான தகவல்கள், ஏமாற்று மோசடிகள் மற்றும் வெறுப்புரை தடுப்பதற்கான நடவடிக்கையாகக் கூறியது. ஆனால், இந்தத் தடை இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் இவர்களின் தொடர்பு, தகவல் பரிமாற்றம் மற்றும் வேலைவாய்ப்புக்கு அத்தியாவசியமானவை. தடைக்கு முன், "நெபோ கிட்" இயக்கம் சமூக வலைதளங்களில் பரவியது. இது அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு வாழ்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிச்சம் போட்டது.
இதையும் படிங்க: #BREAKING சோசியல் மீடியாக்களுக்குத் தடை... போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி...!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறிப்பாக ‘ஜென் Z’ இளைஞர்கள் தலைமையில், ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் கத்மாண்டு நாடாளுமன்றத்தைச் சுற்றி தொடங்கி, போகாரா, புட்வால், தாரன் போன்ற நகரங்களுக்குப் பரவின. நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசியக் கொடி மற்றும் "ஊழலை அடைத்து சமூக வலைத்தளங்களை அல்ல", "சமூக வலைத்தளத் தடை நீக்கம்", "இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக" என்ற வாழ்த்து மெட்டுகளுடன் போராடினர்.
போலீஸ் கண்ணீர் புகை, ரப்பர் புல்லட்கள், நீர் கன்னி பயன்படுத்தியது. இதில் 19 பேர் கொல்லப்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு 12 வயது சிறுவன் உட்பட பலர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து, தலைநகர் காத்மாண்டுவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் பதவி விலகினார்.
இந்நிலையில் போராட்டங்களின் தீவிரத்தால், 26 சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கியது கேபி சர்மா ஒலி அரசு. பிரதமர் கே.பி.சர்மா ஒலி, சமூக வலைத்தளங்கள் நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இருப்பினும், இளைஞர்களின் எதிர்ப்பு அரசை பணிய வைத்தது.

மேலும் அரசு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்கும் என்று அறிவித்தது. கலவரம் குறித்து விசாரணை செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்படும் எனவும் அடுத்த 15 நாட்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம், சமூக வலைத்தளங்களின் செல்வாக்கையும், இளம் தலைமுறையின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் வலிமையையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பகீர் கிளப்பிய கிட்னி முறைகேடு! இன்னும் நடவடிக்கை எடுக்கல... போராட்டத்தில் குதித்த அதிமுக