சீனாவுல இருந்து ஒரு அதிரடியான செய்தி! கரு சுமந்து, குழந்தை பெத்துத் தர்ற ரோபோவை உருவாக்க சீன விஞ்ஞானிகள் தீவிரமா ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க. இந்த புரட்சிகரமான தொழில்நுட்பம் வெற்றி பெற்ரா, குழந்தை இல்லாதவங்களுக்கும், கர்ப்பமாக இருக்க விரும்பாதவங்களுக்கும் இது ஒரு பெரிய புண்ணியமா இருக்கும்னு சொல்றாங்க. ஆனா, இது தாய்-குழந்தை பாசத்தை எப்படி பாதிக்கும்னு ஒரு பெரிய கேள்வி எழுந்திருக்கு!
சீனா, ரோபோட்டிக்ஸ் துறையில உலகத்தையே ஆச்சரியப்படுத்துற நாடு. இப்போ அங்க ஒரு பிரத்யேக ரோபோ விற்பனை மால் கூட திறந்திருக்காங்க. இந்த சூழல்ல, குவாங்சோவைச் சேர்ந்த கைவா டெக்னாலஜினு ஒரு நிறுவனம், குழந்தை பெத்துத் தர்ற ரோபோவை உருவாக்குற ஆய்வுல இறங்கியிருக்கு.
இந்த ப்ராஜெக்டுக்கு சிங்கப்பூர்ல இருக்குற நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தோட விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிபெங் தலைமை தாங்குறார். இவர் சொல்றத பார்த்தா, இந்த ரோபோ 2026-ல அறிமுகமாகப் போகுது, அதுவும் ஒரு ரோபோவோட விலை ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ தான் இருக்குமாம்
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைது!! சீன கையெறி குண்டுகள் பறிமுதல்!! மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்?
இந்த ரோபோவோட வயித்துல ஒரு செயற்கை கருப்பையை பொறுத்தி, கரு வளர்ற மாதிரி செஞ்சிருக்காங்க. இந்த செயற்கை கருப்பையில கரு, மனித கருப்பையைப் போலவே ஒரு திரவத்துல வளரும். கருவுக்கு தேவையான ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் எல்லாம் ஒரு குழாய் மூலமா கொடுக்கப்படுமாம். இது 10 மாசம் வரைக்கும் கருவை சுமந்து, குழந்தையை பெத்துத் தரும்னு சொல்றாங்க.

இந்த ஐடியா, 2017-ல அமெரிக்காவுல உள்ள சில்ரன்ஸ் ஹாஸ்பிடல் ஆஃப் பிலடெல்ஃபியாவுல ஆடு கருவை ஒரு பயோபேக்னு சொல்லப்படுற செயற்கை கருப்பை திரவத்துல வளர்த்த ஆய்வை அடிப்படையா வச்சு உருவாக்கப்பட்டு இருக்கு. அந்த ஆய்வுல, ஆட்டுக்குட்டி 4 வாரத்துல இயல்பா வளர்ந்து, கம்பளி கூட முளைச்சிருக்கு
இந்த தொழில்நுட்பத்துக்கு டாக்டர் ஜாங் ஒரு பெரிய நம்பிக்கை கொடுக்குறார். "இந்த செயற்கை கருப்பை தொழில்நுட்பம் இப்போ முதிர்ச்சியான நிலையில இருக்கு. இனி இதை ஒரு மனித உருவ ரோபோவோட இணைச்சு, மனிதர்களோட இன்டராக்ட் பண்ணுற மாதிரி உருவாக்கப் போறோம்"னு சொல்றார். இந்த ரோபோ, மலட்டுத்தன்மை உள்ளவங்களுக்கு, இல்லை கர்ப்பமாக இருக்க விரும்பாதவங்களுக்கு ஒரு மாற்று வழியா இருக்கும்னு எதிர்பார்க்கறாங்க. ஆனா, இது எத்தனை பேருக்கு எட்டக்கூடிய விலையில இருக்கும்னு தெரியல.
ஆனா, இந்த ஐடியா வந்ததுல இருந்து உலகமே ஒரு பெரிய விவாதத்துல மூழ்கியிருக்கு. ஒரு பக்கம், இது மருத்துவ உலகத்துல புரட்சியை உருவாக்கும்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம், தாய்-குழந்தை இடையிலான பாசம், மனரீதியான பிணைப்பு இதனால பாதிக்கப்படும்னு கவலைப்படுறாங்க. ஒரு குழந்தை ரோபோவுல வளர்ந்தா, அந்த குழந்தைக்கு அம்மாவோட உணர்ச்சி பிணைப்பு எப்படி இருக்கும்? தாய்மைன்னு ஒரு அழகான உணர்வு இதனால மாறிடுமான்னு கேள்வி எழுது.
மேலும், இந்த தொழில்நுட்பத்துக்கு சட்டரீதியா, நெறிமுறை ரீதியா என்னென்ன பிரச்சினைகள் வரும்னு சீனாவுலயே விவாதம் நடந்துட்டு இருக்கு. குவாங்டாங் மாகாண அதிகாரிகளோட இதைப் பத்தி பேச்சு ஆரம்பிச்சிருக்காங்கன்னு டாக்டர் ஜாங் சொல்றார்.
இந்த ரோபோ குழந்தை பெத்துத் தர்ற ஐடியா, மருத்துவ உலகத்துல ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனா, இது சமூகத்துல, குடும்ப அமைப்புல, தாய்-குழந்தை உறவுல என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்னு இப்போவே கற்பனை பண்ண முடியல. இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்ரா, குழந்தை பிறப்பு பத்தின நம்ம பாரம்பரிய புரிதலே மாறிடுமோன்னு ஒரு பயம் இருக்கு. இன்னும் ஒரு வருஷத்துல இந்த ரோபோவோட முதல் மாடல் வந்து, இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமான்னு பார்ப்போம்!
இதையும் படிங்க: இப்ப வாங்கடா.. மோதி பாக்கலாம்..!! சீனாவில் கோலாகலமாக தொடங்கியது ரோபோட் ஒலிம்பிக்ஸ்..!!