மிட் டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் 345 பார்க் அவென்யூவில் பிளாக்ஸ்டோன் முதல் KPMG, ருடின் மேனேஜ்மென்ட், NFL, டாய்ச் பேங்க், JP மோர்கன் சேஸ் மற்றும் பல நிறுவன அலுவலகங்கள் உள்ளன. இதற்கு அருகேயுள்ள உயரமான கட்டிடத்திற்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் முதல் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் போலீஸ் ஒருவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
44 மாடிகளைக் கொண்ட உயரமான கட்டிடத்திற்குள் குண்டு துளைக்காத உடை மற்றும் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நுழையும் காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் ஷேன் தமுரா என்பதும், 27 வயதுடைய அவர் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். AR-15 வகை துப்பாக்கி மற்றும் குண்டு துளைக்காத ஆடை அணிந்து, 44 மாடிகள் கொண்ட கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் முதலில் கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 33-ஆவது தளத்திற்குச் சென்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடத்த உடனேயே போலீசார் விரைந்து வந்து ஒட்டுமொத்த கட்டிடத்தையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை நடவடிக்கை காரணமாக, பார்க் அவென்யூ மற்றும் லெக்சிங்டன் அவென்யூ இடையேயான கிழக்கு 52 தெருவின் அருகே செல்வதைத் தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “மனுஷங்களாடா நீங்க எல்லாம்...” - அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறைக்குள் மலம் கழித்த மர்ம நபர்கள்...!
இதையும் படிங்க: #BREAKING நெல்லையில் பரபரப்பு... போலீசாரை வெட்ட முயன்றவர் மீது துப்பாக்கிச்சூடு - சிறுவன் வயிற்றில் பாய்ந்த குண்டு...!