பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மூன்று பயங்கரவாத அமைப்புகளின் மொத்தம் 9 முகாம்கள் தும்சம் செய்யப்பட்டன. அவற்றில் பஹவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகமும் ஒன்று.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, இந்த பயங்கரவாதிகள் இன்னும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில், ஒரு மகளிர் பிரிவு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், அவர்களுக்கு ஜிஹாத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு சமீபத்தில் ஜமாத்-உல்-முமினாத் என்ற மகளிர் பிரிவை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு ஜிஹாத் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்பு 'துஃபத் அல்-முமினாத்' என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நிதி சேகரிப்பு மற்றும் பயங்கரவாதிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெய்ஷ் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் உறவினர்கள் மற்றும் அவரது தளபதிகள் ஜிஹாத், இஸ்லாம் மற்றும் அவர்களின் கடமைகள் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பார்கள். ஆன்லைனில் நடத்தப்படும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நவம்பர் 8 முதல் தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: மிரட்டப்போகுது மழை... உஷார் மக்களே... 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
இந்த ஆன்லைன் கிளாஸ் ஆனது தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் நீடிக்கும். மசூத் அசாரின் இரண்டு சகோதரிகளான சாதியா அசார் மற்றும் சமைரா அசார் ஆகியோர் இதற்கு தலைமை தாங்குவார்கள். இந்த வகுப்புகள் மூலம், பெண்கள் ஜமாத்-உல்-முமினத்தில் சேர ஊக்குவிக்கப்படுகின்றன. மசூத்தின் மூத்த சகோதரி சாதியா ஜமாத்-உல்-முமினத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூரில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் சாதியாவின் கணவர் உட்பட. மசூத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. பஹல்காம் தாக்குதலில் பங்கேற்ற பயங்கரவாதி உமர் ஃபரூக்கின் மனைவி அஃப்ரீர் ஃபரூக்கும் இந்தப் பட்டியலில் உள்ளார்.
இதற்கிடையில், அசார் தனது நிதி திரட்டும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். கடந்த மாதம் பஹவல்பூரில் உள்ள மர்காஸ் உஸ்மான் ஓ அலியில் நடந்த பொதுக் கூட்டத்திற்குப் பிறகு நன்கொடை சேகரிப்பதில் அவர் கவனம் செலுத்தினார் . பெண்களுக்கான ஜிஹாத் பயிற்சிக்கான நுழைவு கட்டணம் 500 பாகிஸ்தான் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 156 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர் இந்தத் தொகையைச் செலுத்தி ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்
பாகிஸ்தானில் பெண்கள் தனியாக வெளியே செல்ல அனுமதிக்காத தீவிரவாத சமூக விதிமுறைகள் குறித்த விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக ஜெய்ஷ்-இ-முகமது இந்த ஆன்லைன் பிரிவைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: குற்றாலத்தில் 8வது நாளாக தொடரும் தடை..!! ஆனா ஐந்தருவியில் மட்டும் குளிக்கலாம்..!!