ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்று அழைக்கப்படும் எல்லை தாண்டிய துல்லிய தாக்குதல் மூலமாக இந்தியா தும்சம் செய்துள்ளது.

பஹவல்பூரில் மர்கஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலானில் இருந்த சர்ஜால், கோட்லியில் அமைந்திருந்த மர்கஸ் அப்பாஸ், முசாபராபாதில் இருந்த சையத்னா பிலால் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் 4 முகாம்கள், முரிட்கேவில் இருந்த மார்கஸ் தைபா, பர்னாலாவில் இருந்த மர்கஸ் அஹ்லே ஹதீஸ், முசாபராபாத் இருந்த ஷவாய் நல்லா கேம்ப் என்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் 3 முகாம்கள் தரைமட்டமாகியுள்ளன. ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளின் சியால்கோட்டில் இருந்த மெஹ்மூனா ஜோயா முகாம், கோட்லியில் இருந்த மஸ்கர் ரஹீல் ஷாஹித் ஆகிய முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்: ஆடிப்போன பாகிஸ்தான்..! டிவி ஒளிபரப்பில் கதறி கதறி அழுத பெண் தொகுப்பாளர்..!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் இன்று அதிகாலை நடத்திய தொடர் துல்லியத் தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இரண்டு பெரிய இலக்கு தளங்களிலும் சுமார் 25 முதல் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற பயங்கரவாத முகாம்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கணக்கெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவிடம் மொக்கை வாங்கிய ரேடார்கள்... பாகிஸ்தானை ஏமாற்றிய சீனா..! வெறுப்பில் ஷாபாஸ்..!