ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதையும் படிங்க: "ஆபரேஷன் சிந்தூர்": ரவுண்ட் கட்டிய இந்தியா.. சுக்குநூறான 9 இடங்கள்.. திணறும் பாக்.,!

கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்ட 9 இடங்களும் சுக்குநூறாக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் அடுத்தடுத்த அடியால், தலைதூக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே பிரான்ஸில் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. HAMMER என்பது Highly Agile Modular Munition Extended Range/AASM என்பதைக் குறிக்கிறது. மேலும் இது நடுத்தர வரம்பு (70 கிமீ வரை), காற்றிலிருந்து தரைக்கு துல்லிய வழிகாட்டுதல் கொண்ட வெடிமருந்துகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1971-ல சரண் அடைஞ்சத மறந்துராதீங்க.. இந்தியா உங்க Pant-ஐ கழட்டிருச்சே.. பாக்.-ஐ கிழித்து தொங்கவிட்ட பலூச் தலைவர்..!