ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்போதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தைப்போர் தொடங்கியது. இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் 5 இடங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 இடங்கள் என 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா டார்கெட் செய்த அந்த 9 இடங்கள் எவை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் ...
இதையும் படிங்க: 1971-ல சரண் அடைஞ்சத மறந்துராதீங்க.. இந்தியா உங்க Pant-ஐ கழட்டிருச்சே.. பாக்.-ஐ கிழித்து தொங்கவிட்ட பலூச் தலைவர்..!
பஹவல்பூர்: ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம்:
பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாபில் உள்ள பஹவல்பூர் தான் இந்தியா தாக்குதல் நடத்திய முதன்மை இலக்குகளில் ஒன்றாகும். மசூத் அசார் தலைமையிலான பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகம் என்று கூறப்படுகிறது. 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட இந்தியாவில் நடந்த பல கொடூரமான தாக்குதல்களுக்கு இதுதான் மூலகாரணம். இதனால், இந்த இடத்தை இந்தியா டார்கெட் செய்தது.

முரிட்கே: லஷ்கர்-இ-தொய்பா தளம் மற்றும் பயிற்சி அளிக்கும் இடம்:
லாகூரிலிருந்து வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது முரிட்கே. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் துணை அமைப்பான ஜமாத்-உத்-தாவா அமைப்புகளின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த பயங்கரவாத முகாமில் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அழிக்கப்படுவதோடு, ஆயுதங்களும் வழங்கப்படுகிறது. 2008 மும்பை தாக்குதல் நடத்தியவர்கள் இங்கு தான் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்லி: வெடிகுண்டு பயிற்சி மையம்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது கோட்லி. தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோருக்கு ஒரு முக்கிய பயிற்சி தளமாக இருக்கிறது. இந்த மையத்தில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைத் தங்க வைத்து பயிற்சிகள் கொடுத்து வந்ததால் இந்த இடத்தையும் இந்தியா டார்கெட் செய்துள்ளது.

குல்பூர்: ரஜோரி மற்றும் பூஞ்சில் தாக்குதல்களுக்கான மையம்:
கடந்த 2023ல் நடந்த ரஜோரி தாக்குதல், 2024ல் நடந்த பூஞ்ச் தாக்குதல்களுக்கு இந்த குல்பூர் தளம் தான் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியப் பாதுகாப்பு வாகனங்கள், இந்திய மக்கள் மீது எப்படித் தாக்குதல் நடத்துவது என பாகிஸ்தான் தீவிரவாதிகள் இங்கு தான் பயிற்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே இப்பகுதியை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
சவாய்: காஷ்மீர் பள்ளத்தாக்கு தாக்குதல்களுடன் தொடர்புடைய தீவிரவாத முகாம்:
வடக்கு காஷ்மீரில், குறிப்பாக சோன்மார்க், குல்மார்க் மற்றும் பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் இந்த சவாய் மையத்தில் தான் பயிற்சி பெற்றதாகத் தகவல்கள் உள்ளன.
சர்ஜால் மற்றும் பர்னாலா: ஊடுருவலுக்குப் பயன்படும் இடங்கள்:
சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே அமைந்துள்ள சர்ஜால்,பர்னாலா மூலமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். எனவே இந்த இடத்தையும் குறிவைத்து இந்திய தாக்குதல் நடத்தியுள்ளது.

மெஹ்மூனா: ஹிஸ்புல் முஜாஹிதீன் பதுங்கும் இடம்:
சியால்கோட் அருகே அமைந்துள்ள மெஹ்மூனா முகாமை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தது. குறிப்பாக மெஹ்மூனா பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்ததால், இந்த இடமும் தாக்குதல் நடத்தும் வரிசையில் இடம்பெற்றது.
சையத்னா பிலால் முகாம்:
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இந்த சையத்னா பிலால் முகாமும் ஒன்று.
இதையும் படிங்க: போர் ஒத்திகை என்றால் என்ன..? தேசிய அளவில் என்ன நடக்கும்..? தெரிந்து கொள்ளுங்கள்..!