தவெகவிற்கு செங்கோட்டையன் வந்தது பலம் என்ற கருத்து குறித்த கேள்விக்கு "இருக்கட்டும்" என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்த ஓபிஎஸ்
பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது: ராமநாதபுரம் தேர்தல் வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
விஜய் கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் கம்பியில், மரத்தில் ஏறுகிறார்கள், கூட்டத்தை விஜயால் கட்டுப்படுத்த முடியவில்லையா என்ற கேள்விக்கு: என்னை ஏன் அந்த வம்பில் இழுத்து விடுகிறீர்கள் என்றார்.
இதையும் படிங்க: NDA-க்குள் மீண்டும் ஓபிஎஸ்... பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுகவினர்...கூட்டணிக்குள் கொளுத்திப் போட்ட ராம சீனிவாசன்...!
100 நாள் வேலை திட்டம் குறித்த கேள்விக்கு: அது தொடர்பாக அருமையான அறிக்கை விட்டு இருக்கிறேன் படித்து பாருங்கள் எனக் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் வந்தது பலம் என்ற கருத்து குறித்த கேள்விக்கு: இருக்கட்டும் என ஒற்றை வார்த்தையில் பதிலளித்த ஓ.பன்னீர்செல்லம், இன்னும் தலைவர்கள் வருவார்கள் என்று விஜய் கூறியதற்கு பதில் அளிக்காமல் சென்றார்.
இதையும் படிங்க: OPS அடுத்த கட்ட நகர்வு… குழுவை கழகமாக மாற்றிய சம்பவம்… என்ன விஷயம்?