மக்களவையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இரண்டு நாள் விவாதம் நடந்து முடிஞ்சிருக்கு. இந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிச்சு, இந்தியாவோட தெளிவான நிலைப்பாட்டை எடுத்து வச்சாரு. ஆனா, இதுக்கு பதிலா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு கடுமையான அறிக்கை வெளியிட்டு, இந்தியாவை கடுமையா விமர்சிச்சிருக்கு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து எந்த நம்பகமான ஆதாரமோ, விசாரணையோ இல்லாம இந்தியா பாகிஸ்தான் மேல குற்றம் சாட்டியிருக்குன்னு பாகிஸ்தான் சொல்றது. மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பத்தி இந்திய தலைவர்கள் பேசினது, உண்மைகளைத் திரிக்கிற ஆபத்தான போக்குன்னு அவங்க குற்றம்சாட்டியிருக்காங்க.
பாகிஸ்தானின் புலம்பல் இதோட நிற்கல. இந்தியாவோட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான மூணு பயங்கரவாதிகளை கொன்னதா இந்தியா சொன்னாலும், இதை பாகிஸ்தான் அர்த்தமே இல்லாத கதையா கருதுது. இந்தியா பாகிஸ்தானோட அணு ஆயுத மிரட்டலைப் பத்தி பேசுறது, தவறா வழிநடத்துற, சுயநல நோக்கம் கொண்ட கதையா இருக்குன்னு பாகிஸ்தான் குறை சொல்றது.
இதையும் படிங்க: இந்தியாவின் மனைவி பாக்., ராஜஸ்தான் எம்.பி. கருத்தால் லோக்சபாவில் சிரிப்பலை..!
இதோட, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்படுத்தி நிறுத்தி வச்சிருக்குறது, சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்காத செயல்னு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. இந்தியா உடனே இந்த ஒப்பந்தத்தை மதிச்சு செயல்படணும்னு வற்புறுத்தியிருக்காங்க.

பாகிஸ்தான் தன்னோட அறிக்கையில, ஐ.நா. சாசனத்தை மதிச்சு, இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்கணும்னு சொல்லி, அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மை, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமா தீர்வு காண தயாரா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, இந்தியா இதுக்கு செவி சாய்க்குற மனநிலையில இல்லை.
பாகிஸ்தான் ஆக்கிரமிச்ச காஷ்மீரை (PoK) திருப்பி கொடுக்குறது, பயங்கரவாதத்தை ஒழிக்குறது இதைப் பத்தி மட்டுமே பாகிஸ்தானோடு பேச்சு நடத்துவோம்னு இந்தியா திட்டவட்டமா சொல்லியிருக்கு.
மக்களவை விவாதத்துல, பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரை தீவிரமா பாதுகாத்து பேசினாரு. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியா, மே 7-ல் இந்திய ராணுவம் பாகிஸ்தான்ல இருக்குற பயங்கரவாத முகாம்களை துல்லியமா தாக்கி, 100-க்கு மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்னதா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிச்சாரு.
இந்த நடவடிக்கை பாகிஸ்தானோட பயங்கரவாத ஆதரவு கொள்கையை உலகத்துக்கு முன்னாடி அம்பலப்படுத்தியிருக்குன்னு மோடி சொன்னாரு. எந்த உலக தலைவரும் இந்தியாவை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லல, ஆனா பாகிஸ்தான் தான் தாங்க முடியாம இந்தியாவை கெஞ்சி நிறுத்தச் சொன்னதாக மோடி தெளிவு படுத்தினாரு.

பாகிஸ்தானோட வெளியுறவு அமைச்சகம், இந்தியாவோட இந்த நடவடிக்கைகள் உண்மையை மறைச்சு, ஆக்ரோஷத்தை நியாயப்படுத்துற முயற்சின்னு குற்றம்சாட்டுது. ஆனா, இந்தியா தன்னோட நிலைப்பாட்டுல உறுதியா இருக்கு. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்துல நடக்க முடியாது”ன்னு திட்டவட்டமா சொல்லியிருக்காரு. இந்தியாவோட புது அணுகுமுறை, பயங்கரவாதத்துக்கு எதிரா கடுமையான நடவடிக்கையும், அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாமையும் தான் புது நார்மல்னு வலியுறுத்தியிருக்காரு.
இந்த சூழல்ல, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக்கிட்டு இருக்காங்க. பாகிஸ்தான் அமைதி பேச்சு பேசுற மாதிரி காட்டிக்கிட்டாலும், இந்தியா அதை நம்புற மனநிலையில இல்ல. இந்தியாவோட கவனம், பயங்கரவாதத்தை ஒழிக்குறதும், PoK-வை மீட்குறதும் தான்.
இந்த விவகாரம் இனி எந்தப் பக்கம் போகப் போகுது, பேச்சுவார்த்தை மூலமா தீர்வு வருமா, இல்ல பதற்றம் இன்னும் அதிகரிக்குமான்னு பார்க்க வேண்டியிருக்கு. இது உலக அரங்கத்துல இந்தியாவோட நிலைப்பாட்டையும், பாகிஸ்தானோட பதிலையும் எப்படி பாதிக்கப் போகுதுன்னு கவனிக்க வேண்டிய விஷயம்!
இதையும் படிங்க: நேரு செஞ்ச தப்பை மோடி திருத்திருக்காரு! இது பாகிஸ்தானுக்கு பனிஷ்மென்ட்.. ஜெய்சங்கர் அதிரடி..!