பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் என்று அதிகாலை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த அற்புத சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சருமான இஷாக் தார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்திய விமானப்படை, இந்திய வான்வெளியில் இருந்து கொண்டே, பாகிஸ்தானின் இறையாண்மையை மீறி, முரிட்கே மற்றும் பஹாவல்பூரில் சர்வதேச எல்லையிலும், கோட்லி மற்றும் முசாபராபாத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டிலும், ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பொதுமக்களை குறிவைத்து, தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலியாகி உள்ளதாகவும், இந்தியாவின் இந்த நடவடிக்கை வணிக, விமானப் போக்குவரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இறங்கி அடிக்கும் இந்திய ராணுவம் "ஆப்ரேஷன் சிந்தூர்"! அதிகாலையே அதிரடி பாய்ச்சல்...

இந்தியாவின் அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்தியாவின் கோழைத்தனமான நடவடிக்கை, ஐநா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளின் நிறுவப்பட்ட விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகிறது என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியத் தலைமை மீண்டும் பயங்கரவாதத்தின் போக்கை பயன்படுத்துவதாகவும், இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கை இரண்டு அணு ஆயுத நாடுகளையும் ஒரு பெரிய மோதலுக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக பாகிஸ்தான் அரசும், ஆயுதப்படைகளும், மக்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்., பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உறுதியுடன் அனைவரும் செயல்படுவார்கள் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! இந்திய ராணுவ இணையதளம் மீது பாக். சைபர் அட்டாக்..!