இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் அரசிற்கு இஸ்லாமிய மதத் தலைவர்களும் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இஸ்லாமாபாத்தின் புகழ்பெற்ற லால் மௌலாவின் மௌல்வி இந்த போர் மதரீதியானது அல்ல என்று அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் இந்தப் போரில் இருந்து விலகி இருக்குமாறு மௌல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். மௌலானாவுக்கு முன்பு, இம்ரான் கான் போன்ற தலைவர்களும் பாகிஸ்தான் அரசை விமர்சித்துள்ளனர்.

முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி மௌலானாவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் மௌலானா அப்துல் அஜீஸ் காசி, ''இந்தியாவுடன் போர் செய்வீர்களா?'' என்று மக்களிடம் கேட்கிறார். இது குறித்து, அங்கு கூடியிருந்த மக்கள் ''இல்லை'' என்று குறிப்பிடுகின்றனர். மௌலானா மக்களை இது குறித்து ''புத்திசாலிகள்'' என்று கூறுகிறார்.
இதையும் படிங்க: மெயின் பியூஸை பிடுங்கிய இந்தியா... ஊசலாடும் பாகிஸ்தான் பொருளாதாரம்!!
பாகிஸ்தானின் மிகப்பெரிய மதத் தலைவராக மௌலானா அஜீஸ் கருதப்படுகிறார். இஸ்லாமாபாத்தின் லால் மசூதி மிகவும் பிரபலமான மசூதி. மௌலானா அப்துல் அஜீஸ் இது குறித்து, ''இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போராட்டம் மதரீதியானது அல்ல. இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராட்டம். இதை அரசு நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

இந்தியாவை விட பாகிஸ்தானில் அதிக ஒடுக்குமுறை இருகிறது. இங்குள்ள அரசு அதைப் புறக்கணிக்கிறது. இந்நிலையில், அதற்காகப் போராட வேண்டிய அவசியமில்லை. இந்த நுட்பமான தருணத்தில் மக்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்'' என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனீர் சமீபத்தில் பாகிஸ்தானை அல்லாவின் நாடு என்று கூறினார். உலகில் அல்லாஹ்வின் விருப்பத்தால் நிறுவப்பட்ட இரண்டு நாடுகள் மட்டுமே உள்ளன. பாகிஸ்தானை ஆதரிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த நேரத்தில், முனீர் இந்துக்களுக்கு எதிராகவும் விஷத்தை கக்கினார்.

முனீர் ஆற்றிய இந்த உரைக்குப் பிறகுதான் பஹல்காமில் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் அடில் ராஜா கூறியபடி பஹல்காம் தாக்குதலின் மூளையாக முனீர் உள்ளார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு அச்சச் சூழல் நிலவுகிறது. அதற்கு எதிராக தாக்குதல் நடத்த இந்தியா ஒரு உத்தியை வகுத்து வருவதாக பாகிஸ்தான் கூறியது. இருப்பினும், இதுவரை பாகிஸ்தான் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. சிந்து மற்றும் ஜீலம் நதிகளின் நீரை இந்தியா ராஜதந்திர ரீதியாக நிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லஷ்கர்-இ-தொய்பா தலைவன் எங்கே இருக்கிறான்..? தெனாவெட்டாக மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!