அஷ்காபாத், டிசம்பர் 13: துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க 40 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பொறுமையிழந்து புடின் - துருக்கி அதிபர் ரெஜெப் தையிப் எர்டோகன் ஆகியோர் நடத்திய தனியறை சந்திப்புக்குள் அனுமதியின்றி நுழைந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஷெரீஃபின் செயலை விமர்சித்து வருகின்றனர்.
துர்க்மெனிஸ்தானின் 30வது சுதந்திர தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் 'சமாதானம் மற்றும் நம்பிக்கை' ஆண்டு கொண்டாட்டமாக சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்யா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டுக்கு இடையே புடின் எர்டோகனுடன் தனியறையில் ஆலோசனை நடத்தினார். அதே நேரம், புடினை தனியாக சந்திக்க விரும்பிய ஷெரீஃப் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் ஆகியோர் தனி அறையில் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: NEW DRAVIDIAN STOCK... ALL ARE WELCOME.! திமுக இளைஞரணி சந்திப்புக்கு முதல்வர் அழைப்பு...!

40 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த ஷெரீஃப், திடீரென புடின் - எர்டோகன் சந்திப்பு நடந்த அறைக்குள் நுழைந்தார். சுமார் 10 நிமிடங்கள் அங்கு இருந்த அவர், பின்னர் தனியாக வெளியேறினார். இந்த சம்பவத்தின் வீடியோ ரஷ்ய ஊடகமான RT இந்தியா வெளியிட்டது. ஆனால், பின்னர் அந்த வீடியோவை நீக்கி, “சம்பவத்தை தவறாக சித்தரித்திருக்கலாம்” என்று RT விளக்கம் அளித்தது.
பாகிஸ்தான் ஊடகங்கள், ஷெரீஃப் புடின் மற்றும் எர்டோகனுடன் தனித்தனியே சந்தித்து பேசியதாகவும், இரு நாடுகளுடனான உறவு குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்தன. இருப்பினும், வீடியோவால் ஷெரீஃப் உலக அளவில் கேலிக்குள்ளானார். பலர் இதை நாகரிகமற்ற செயல் என்று விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் மீம்கள் பரவி, பாகிஸ்தானின் இராஜதந்திர முயற்சிகளை கேலி செய்தனர்.
இந்த சம்பவம் பாகிஸ்தான் - ரஷ்யா உறவில் சிறு இடைவெளியை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ரஷ்யா - இந்தியா உறவு வலுவடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் முயற்சிகள் சவாலாக உள்ளன என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக வருகையால் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரஷர்!! திமுகவில் தலைகீழ் மாற்றம்! தீயாய் வேலை செய்யும் இளைஞரணி!