இந்தியா பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்திற்கிடையே, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பதிலளித்துள்ளார். ''அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் இப்போது தங்கள் முன் இல்லை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் தற்போது பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், அந்த நிலை ஏற்பட்டால், அது எங்கள் எதிகளை பாதிக்கும்.

இது இந்தியாவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாது. இது மிகப் பெரிய அளவில் நடக்கலாம். இது அழிவு என்று நான் உலகத்திற்கே சொல்கிறேன். இந்தியாவால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எமது விருப்பங்கள் குறைந்து வருகிறது.பாகிஸ்தானின் தேசிய கட்டளை ஆணையத்தின் எந்தக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை'' என்று ஆசிஃப் கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்த செயல்பாட்டு முடிவுகளை எடுப்பதற்கு தேசிய கட்டளை ஆணையமே பொறுப்பேற்று வருகிறது.
இதையும் படிங்க: அடி அடின்னு வெளுக்குறாங்க..! இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை துணைக்கு அழைக்கும் பாக்..!

''இந்தியா இராணுவ நடவடிக்கையை நிறுத்தினால், பாகிஸ்தான் அமைதியைப் பரிசீலிக்கும்'' என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார். ரூபியோவுடனான உரையாடலில், ''போரை நிறுத்தும் பந்து இந்தியாவின் கையில் இருக்கிறது. போர் எங்கள் முன்னுரிமை அல்ல. நாங்கள் உண்மையில் அமைதியை விரும்புகிறோம். ஆனால் எந்த நாட்டின் ஆதிக்கமும் எங்கள் மீது செலுத்தப்படாமல் அதனைச் செய்ய விரும்புகிறோம்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரூபியோ, சவுதி வெளியுறவு அமைச்சர் உட்பட உலகத் தலைவர்களுடனான எனது உரையாடல் நேர்மறையானது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடியும் என்று நம்புகிறோம். சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளின் படைகளுக்கும் இடையில் இரு தரப்பில் இருந்தும் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது'' என பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!