ஏப்ரல் 22ம் தேதி தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா தான் காரணம் என இந்திய உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து 60 ஆண்டுகளாக பழமை மிக்க சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன. 1948 மார்ச் 31-ல் ஒப்பந்தம் காலாவதியானது. அதன்பிறகு இந்தியாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்தது. சுமார் 17 லட்சம் ஏக்கர் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டது.
இதன்பிறகு உலக வங்கியின் சமரசத்தின்பேரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமார் 10 ஆண்டுகள் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்படி கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இரு நாடுகளிடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதமர் நேரு, அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையும் படிங்க: நாய் பெற்ற தெங்கம்பழம்..! இந்தியாவை உசுப்பேற்றும் பாக்..! நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்..!
இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 3 போர்களின் போது கூட பாகிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து தண்ணீர் வழங்கி வந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. சிந்து நதி இடையே 6 அணைகளை கட்ட இந்தியா திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் மின் உற்பத்திக்காக சவால்கோட், ரேட்லே, பர்சர், கிரு, கீர்த்தாய் 1 மற்றும் 2 நீர்மின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 6 அணைகளை இந்திய அரசு கட்டவுள்ளது.

ஏற்கனவே காஷ்மீர் வழியாக ஓடும் ஆறுகளின் ஓட்ட விகிதம் குறைந்து வருவதாலும், காலப்போக்கில் படுகையில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் காரணமாகவும், நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா அழைப்பு விடுத்து வருகிறது. இதனிடையே, ஏற்கனவே செயல்பட்டில் உள்ள ரேட்லே மற்றும் கிஷென்கங்கா அணை திட்டத்திற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச நடுவர் மன்றத்தை நடவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐ.நா., அளித்த அதிர்ச்சி..! தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்..! கைவிட்ட உலக நாடுகள்..!